LOADING

Type to search

கனடா அரசியல்

கனடாவில் தமிழ் உணர்வாளர் நடிகர் கருணாஸ்!

Share

*தனது ‘சல்லியர்கள்’ திரைப்படத்தை எமது மக்களுக்காக திரையிடும் நோக்கோடு அவரது பயணம்!

*எமது தாயக விடுதலைப் போரில் அயராது உழைத்த மருத்துவப் போராளிகளின் அனுபவங்களை திரைக்கு கொண்டுவரும் ‘சல்லியர்கள்’ திரைப்படம் வெற்றிபெற ஆதரவு வழங்கும் எம்.பி.பி லோகன் கணபதி அவர்களும் அவரது குழுவினரும்!

பிரபல நடிகரும் முன்னாள் சட்டசபை உறுப்பினரும் தமிழ் உணர்வாளருமான நடிகர் கருணாஸ் அவர்கள் தற்போது கனடா வந்துள்ளார். அண்மையில் அவர் தயாரித்து வெளியிட்ட தனது ‘சல்லியர்கள்’ திரைப்படத்தை கனடாவில் எமது மக்களுக்காக திரையிடும் நோக்கோடு அவரது பயணம் அவரது பயணம் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

நேற்று காலை மாகாணப் பாராளுமன்ற உறுப்பினர் லோகன் கணபதி அவர்களோடு ரொறன்ரோ மாநகரில் அமைந்துள்ள ‘குயின்ஸ்பார்க்’ பாராளுமன்ற வளாகத்திற்குச் சென்ற அவர் அங்கு பாராளுமன்ற அமர்வின் போது அவரது வருகை பற்றியும் மற்றும் எமது போராட்ட காலங்களில் காயப்பட்ட போராளிகள் மற்றும் பொது மக்கள் ஆகியோர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளித்த கதையைக் கொண்ட ‘சல்லியர்கள்’ திரைப்படம் பற்றியும் லோகன் கணபதி அவர்கள் தனது உரையில் தெரிவிக்க, பாராளுமன்ற சபா மண்டபத்தில் அமர்ந்திருந்து அதை செவிமடுத்தார். அப்போது பல மாகாணப் பாராளுமன்ற உறுப்பினர்கள் எழுந்து நின்று கரகோசம் செய்து அவரை வரவேற்றனர்

பின்னர் ரொறன்ரோ நகரில் நடைபெற்ற மாவீரர் நாள் வணக்க நிகழ்விற்கு லோகன் கணபதி அவர்களோடு சென்று அதில் கலந்து கொண்டார். அங்கும் தமிழ் மக்களோடு உரையாடினார்.
நேற்று 27ம் திகதி மாலையில் அவர் கனடா உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியருக்கு வழங்கிய நேர்காணலில் .அவர் தனது புதிய திரைப்படமான ‘சல்லியர்கள்’ பற்றிய தனது கருத்துக்களைத் தெரிவித்தபோது பின்வரும் விடயங்களை தெளிவாகவும் எமது ஈழத்தமிழ் மக்கள் மீது கொண்ட பற்றோடும் உணர்வோடும் தெரிவித்தார்.

தொடர்ந்து நடிகர் ‘சல்லியன்’ திரைப்படம் பற்றியும் ஈழத்தமிழர்களின் போராட்டம் உச்சத்தை தொட்டு நின்ற நிலையில் அதை அந்த வீரத்தை சதி செய்து அழித்திட்ட உலகின் பல நாடுகளின் பங்களிப்பைப் பற்றி கவலையும் பகிர்ந்து கொண்டு திரைப்படத்திற்குள் சென்றார்.

உதயன் பத்திரிகை ஆசிரியர் லோகேந்திரலிங்கம் திரைப்படத்தின் நடிக நடிகையர்கள் ப்றறி அவரது கருத்துக்களை கேட்கவிரும்புவதாகக் கூறியபோது. நடிகர் கருணாஸ் அவர்கள் ஒரு உணர்வுபூர்வமான பதிலைத் தெரிவித்தார.

“நான் ‘சல்லியன்’ திரைப்படத்தில் ஆயுதம் தாங்கிய போராளிகளாக நடித்தவர்களையும் மருத்துவப் போராளிகளாக நடித்தவர்களையும் ஏனைய சாதாரண பாத்திரங்களில் நடித்தவர்களையும் நடிக நடிகையர்களாக பார்க்கவில்லை. அவர்கள் அனைவரும் களத்தில் நிற்கும் உண்மையான போராளிகளாகவே பார்த்தேன். விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு மக்களின் பேராதரவு இருந்தது. அவ்வாறான மக்களின் ஒரு பகுதியாக இருந்தவர்களையும் உணர்வுள்ள தமிழ் மக்களாகவே பார்த்தேன்.

இந்த ‘சல்லியன்’ திரைப்படத்தின் மூலம் அதில் நடித்தவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. அவர்களும் அதை எதிர்பார்க்கவில்லை. ‘சல்லியன்’ திரைப்படத்தை தயாரித்ததின் நோக்கமே. இவ்வாறான ஒரு கடினமான போர்க்களத்தில் போராளிகளையும் மக்களையும் காப்பாற்றி தங்களையும் காப்பாற்றிக் கொள்ள மருத்துவப் போராளிகள் எவ்வளவு அர்ப்பணிப்பை செய்திருப்பார்கள் என்பதும் அதை அந்த போராளிகள் தியாகத்தின் காரணமாக வெளிநாடுகளில் அவர்களின் நினைவோடு வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ் மக்களில் மனங்களில் போராளிகளின் பெருமையும் தியாகமும் நன்கு பதிய வேண்டும் என்பது தான்.” என்றார்

எமது தாயக விடுதலைப் போரில் அயராது உழைத்த மருத்துவப் போராளிகளின் அனுபவங்களை திரைக்கு கொண்டுவரும் ‘சல்லியர்கள்’ திரைப்படம் வெற்றிபெற ஆதரவு வழங்கும் எம்.பி.பி லோகன் கணபதி அவர்களும் அவரது குழுவினரும் இணைந்து 29ம் திகதி நடைபெறவுள்ள பத்திரிகையாளர் சந்திப்பில் இங்குள்ள அனைத்து பத்திரிகையாளர்களும் சமூக ஊடகங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்தார்.

Arjune – Local Journalism Initiative Reporter