LOADING

Type to search

இலங்கை அரசியல்

கூட்டுறவாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான வீரசிங்கத்தின் 60வது ஆண்டு நினைவேந்தல்!

Share

கூட்டுறவு பெரியார் வீரசிங்கம் அவர்களின் 60வது ஆண்டு நினைவுதின நிகழ்வு 5ம் திகதி வியாழக்கிழமை அன்றைய தினம் யாழ்ப்பாணம் வீரசிங்க மண்டபத்தில் நடைபெற்றது.

மங்கல விளக்கு ஏற்றி வைக்கப்பட்டு நிகழ்வு ஆரம்பமானது. அதனைத் தொடர்ந்து பெரியாரின் திருவுருவச் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து தலைமையுரை, நினைவுப் பேருரை, விருந்தினர்கள் உரைஃ கூட்டுறவாளர்கள் கௌரவிப்பு, மனைப் பொருளியல் பயிற்சி நெறியை நிறைவு செய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கல் போன்ற நிகழ்வுகள் நடைபெற்றன.

யாழ்ப்பாணம் மாவட்ட கூட்டுறவு சபையின் தலைவர் க.மகாதேவன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் முதன்மை விருந்தினராக வடக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் ந.திருலிங்கநாதன் அவர்களும், சிறப்பு விருந்தினராக யாழ்ப்பாண மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் கி.சந்திரசேகரன் அவர்களும் கலந்து சிறப்பித்ததுடன், யாழ்ப்பாணம் மாவட்ட கூட்டுறவு சபையின் உப தலைவர் ப.கேசவதாசன், கூட்டுறவு சங்கங்களை சார்ந்த பிரதிநிதிகள், கூட்டுறவு சங்கங்களின் அங்கத்தவர்கள், கூட்டுறவு சங்கங்களின் பணியாளர்கள் போன்ற பலர் கலந்துகொண்டனர்.