LOADING

Type to search

இலங்கை அரசியல்

யாழ்ப்பாணத்தில் தென்மராட்சி விவசாயிகள் வயலில் இறங்கி போராட்டம்!

Share

தொண்டமனாறு தடுப்பணையைத் திறந்து விட்டு தமது நெற் பயிர்களை அழிவில் இருந்து காப்பாற்றக் கோரி தென்மராட்சிப் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட வரணி நாவற்காடு கிராம விவசாயிகள் (05/12) அன்று வியாழக்கிழமை வயலில் இறங்கிப் போராட்டம் செய்துள்ளனர்.

தொண்டமனாறு தடுப்பணையை மூடி வைத்திருப்பதால் தென்மராட்சி வரணிப் பிரதேச வயல்களில் தேங்கி நிற்கும் மேலதிக நீர் வடிந்து செல்ல முடியாமல் வயல் நிலங்களில் தேங்கி பயிரை அழிவடையச் செய்வதால் விரக்தியடைந்த விவசாயிகள் மேற்படி போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.