ஐந்து நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட குடும்பப் பெண் பருத்தித்துறையில் உயிரிழப்பு!
Share
பு.கஜிந்தன்
ஐந்து நாள் காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட இளம் தாய் ஒருவர் 11ம்திகதி புதன்கிழமை உயிரிழந்துள்ளார். பருத்தித்துறையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதில் பருத்தித்துறை ஓடக்கரையைச் சேர்ந்த சுரேஷ் குமார் ரஞ்சிதா (வயது- 33) என்பவரே உயிரிழந்தவராவார். கடந்த மூன்று தினங்களாக இவருக்கு காய்ச்சல் ஏற்பட்டதைத் தொடர்ந்து பனடோல் உட்கொண்டுள்ளார். காய்ச்சல் குணமடையாத நிலையில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்த போது அவர் மயங்கியுள்ளார்.
இந்நிலையில் உடனடியாக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் நேற்று செவ்வாய்க் கிழமை முற்பகல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இம் மரணம் தொடர்பில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேமகுமார் விசாரணைகளை மேற்கொண்டார்.