சீன இராணுவ விஞ்ஞான அக்கடமி ஆய்வாளர்களும் இலங்கை பாத்பைன்டர் பவுன்டேஷன் பிரதிநிதிகளும் கொழும்பில் கலந்துரையாடினர்.
Share
ந.லோகதயாளன்.
இலங்கைக்கு வருகைதந்திருக்கும் சீன நாட்டின் பெய்ஜிங்கின் இராணுவ விஞ்ஞான அகடமியின் ஆய்வாளர்களுக்கும் பாத்பைன்டர் பவுன்டேஷன் அமைப்பின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு அண்மையில் பேலியகொடவில் அமைந்திருக்கும் அவ்வமைப்பின் தலைமையகத்தில் நடைபெற்றது.
பாத்பைன்டர் பவுன்டேஷன் அமைப்புடனான தொடர்புகளை வலுப்படுத்துவதுடன், இருதரப்பினருக்கும் நன்மையளிக்கக்கூடிய விடயங்கள் குறித்துக் கலந்துரையாடும் நோக்கில் இலங்கைக்கு வருகைதந்திருக்கும் பெய்ஜிங் இராணுவ சட்டக்கட்டமைப்பு கற்கைகள் நிறுவனத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி இயங்கிவரும் இராணுவ விஞ்ஞான அகடமியின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
இலங்கையும் சீனாவும் எதிர் காலத்தில் ஒன்றிணைந்து பணியாற்றுவதற்கு ஏதுவான புதிய வாய்ப்புக்கள் தொடர்பில் இந்தச் சந்திப்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
இவ்விருதரப்பு சந்திப்பின்போது ஒரு மண்டலம், ஒரு பாதை செயற்திட்டத்தின் பின்னணியில் சீன – இலங்கை உறவு, இருநாடுகளினதும் பாதுகாப்புத்துறை ஒழுங்குகள் மற்றும் இராணுவ சட்டக்கட்டமைப்பு தொடர்பான ஒப்பீடு, பாத்பைன்டர் பவுன்டேஷன் போன்ற வெற்றிகரமான இராஜதந்திர கொள்கைசார் அமைப்பை நிறுவுவதற்கான அணுகுமுறைகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விடயங்கள் குறித்தும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது