ஜெனிவா சமவாயங்களின் 75ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு யாழ். பல்கலைக்கழகத்தில் கலந்துரையாடல்!
Share
பு.கஜிந்தன்
ஜெனிவா சமவாயங்களின் 75ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு சுவிஸர்லாந்து தூதரகம், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த கலந்துரையாடல் நிகழ்வும், கண்காட்சியும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் 16ம் திகதி திங்கட்கிழமை இடம்பெற்றது.
அதிதியாகக் கலந்துகொண்ட வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் கண்காட்சியை நாடா வெட்டி ஆரம்பித்து வைத்தார்.
இந்த நிகழ்வில் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான சுவிஸர்லாந்தின் பிரதித்தூதுவர் ஒலிவர், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் தூதுக்குழுத் தலைவர் சப்பாஸ், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் எஸ்.சிறிசற்குணராஜா, சட்டத்தரணியும் பேராசிரியருமான வி.ரி.தமிழ்மாறன் ஆகியோர் கலந்துகொண்டனர்.