யாழ்ப்பாணத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த குடும்பஸ்தர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!
Share
இன்றையதினம் மோட்டார் சைக்கிளில் வீதியில் பயணித்துக் கொண்டிருந்த நபர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிர்மாய்த்துள்ளார். அச்செழு, நீர்வேலி பகுதியைச் சேர்ந்த தேவதாசன் உதயசேனா (வயது 64) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில்,
இவர் 22-12-2024 அன்றையதினம் நீர்வேலியில் அமைந்துள்ள வாழைக்குலை சங்கத்திற்கு வாழைக்குலையை கொடுப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இதன்போது அவர் திடீரென வீதியில் மயங்கி விழுந்துள்ளார்.
இந்நிலையில் அவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது. அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.
இருதய வால்வு சுருக்கம் காரணமாக மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.