LOADING

Type to search

இலங்கை அரசியல்

ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதலில் 46 பேர் உயிரிழப்பு – பதட்டம்

Share

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடைபெற்று வருகிறது. இதனிடையே, ஆப்கானிஸ்தானின் பல்வேறு கிளர்ச்சி அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தானி தலிபான் என்ற கிளர்ச்சி அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு தங்கள் நாட்டின் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்துவதாகவும், இது பயங்கரவாத அமைப்பு என்றும் பாகிஸ்தான் குற்றஞ்சாட்டி வருகிறது. மேலும், இந்த அமைப்பை குறிவைத்து அவ்வப்போது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் நேற்று வான்வழி தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தான் எல்லையோரம் அமைந்துள்ள ஆப்கானிஸ்தானின் பக்திகா மாகாணத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 46 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் அனைவரும் பொதுமக்கள் எனவும் இதில் பெரும்பாலானோர் பெண்கள், குழந்தைகள் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானுக்குள் புகுந்து பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல் நடத்தியதால் இருநாடுகளுக்கும் இடையே பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.