யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தின் வருடாந்த உத்தியோகத்தர்கள் கெளரவிப்பு நிகழ்வு!
Share
யாழ்ப்பாண மாவட்டச் செயலக நலன்புரிக் கழகம் நடாத்திய வருடாந்த உத்தியோகத்தர்கள் கெளரவிப்பு நிகழ்வு கழகத் தலைவர் செல்வி உ. தர்ஷினி அவர்களின் தலைமையில் 26.12.2024 அன்றைய தினம் பி.ப 02.00 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக அரசாங்க அதிபரும் நலன்புரி கழகத்தின் போசகருமான திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
இந் நிகழ்விற்கு வாழ்த்துரையினை மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு. க. ஶ்ரீமோகனன் அவர்கள் வழங்கினார். ஓய்வு பெற்ற மற்றும் இடமாற்றலாகிச் சென்ற உத்தியோகத்தர்கள் தொடர்பாக அனுபவப் பகிர்வினை உத்தியோகத்தர்கள் வழங்கினார்கள்.
இறுதியாக மாவட்டச் செயலகத்தில் கடமையாற்றி ஓய்வு பெற்ற உத்தியோகத்தர்கள் மற்றும் இடமாற்றலாகிச் சென்ற உத்தியோகத்தர்கள் கெளரவிக்கப்பட்டார்கள். இந்நிகழ்வில் மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டார்கள்.