LOADING

Type to search

கனடா சமூகம்

கனடா வருகை தந்திருந்த இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவரை நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் – கனடா கௌரவித்து மகிழ்ந்தது!

Share

அண்மையில் உத்தியோகபூர்வ விஜயமாக கனடா வருகை தந்திருந்த, ஈழத் திருநாட்டின் நெற்றித் திலகமாம் நெடுந்தீவின் மைந்தனும், வளம் கொழிக்கும் கிளிநொச்சி மக்களின் வாழ்விலும், மனங்களிலும் என்றும் நிலையாக வாழுகின்ற, இலங்கை தமிழரசு கட்சியின் தலைவரும், இலங்கை பாராளுமன்ற உறுப்பினருமாகிய கெளரவ சிவஞானம் ஸ்ரீதரன் அவர்களையும்,

திருகோணமலையின் மைந்தனும், சமுகப்பணிக்கே தன் வாழ்நாளின் பெரும்பகுதியை அர்ப்பணித்த இலங்கை திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ சண்முகம் குகதாசன் அவர்களையும்,

21-12-2024 அன்று நடைபெற்ற மக்கள் சந்திப்பு என்னும் கலந்துரையாடல் நிகழ்வில் நெடுந்தீவு மக்கள் ஒன்றியம்-கனடா கௌரவித்து மகிழ்ந்திருந்தது.

அழைக்கப்பெற்ற பார்வையாளர்கள் மற்றும் அரசியல் ஆர்வலர்கள் என நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து சிறப்பித்தார்கள்.