LOADING

Type to search

கனடா அரசியல்

Praba-50- Musical Night Event will be taking place in Scarborough to raise Funds for Tamil Community Centre and The Princess Margret Cancer Foundation, on Jan. 24th, 2025.

Share

பிரபா-50 என்னும் முழுமையான இசை நிகழ்ச்சியும் மக்கள் நலனுக்கான பயன்படும் இரண்டு நிறுவனங்களுக்கான நிதிசேகரிப்பு முயற்சியும்

பிரபா-50 என்னும் முழுமையான இசை நிகழ்ச்சியும் அதன் மூலம் மக்கள் நலனுக்கான பயன்படும் இரண்டு நிறுவனங்களுக்கான நிதிசேகரிப்பு முயற்சியும் எதிர்வரும் 24-01-2025 அன்று ஸ்காபுறோ ‘பிரைட்ரன் கொன்வென்சன் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

கனடாவில் கடந்த 2 தசாப்த்தங்களாக இசை மேடைகளில் எமது ரசிகர்களை மகிழ்வித்து வரும் பாடகர் பிரபா அவர்கள் 50வயதை எட்டும் இந்த நாளில் அவர் ஒரு இசை நிகழ்ச்சியையும் நடத்தி பாடல் இசைத் தட்டு ஒன்றையும் வெளியிட்டு நிதி சேர்த்து அந்த நிதியில் ஒருபகுதியை கனடாவில் ஸ்காபுறோ நகரில் அமையவுள்ள ‘தமிழ்ச் சமூக மைய’ த்திற்கும் மறு பகுதியை கனடாவில் பல புற்று நோயால் பாதிக்கப்பெற்ற நோயாளர்களுக்கு மறுவாழ்வு அளித்துள்ள he Princess Margret Cancer Foundation வைத்தியசாலைக்கும் வழங்கும் முயற்சியில் அவர் இறங்கியுள்ளார்.

அவரது அனைத்து முயற்சிகளுக்கு அவரது குடும்பத்தினர் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் ஆகியோர் தங்கள் முழுமையான ஆதரவை வழங்கவுள்ளார்கள் என்பதை கடந்த 23-12-2024 திங்கட்கிழமையன்று மாலை நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அறியக்கூடியதாக இருந்தது.

அன்றைய பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பிரதான மேசையில் பாடகர் பிரபா அவர்கள் மத்தியில் அமர்ந்திருக்க இரண்டு பக்கங்களிலும் ‘தமிழர் சமூக மையம்’ நிதி சேகரிப்புக்குக் குழுவில் முக்கிய பங்கு வகிக்கும் வர்த்தகப் பிரமுகர் சாந்தா பஞ்சலிங்கம் அவர்களும் வீடு விற்பனை முகவர் ரமணன் சந்திரசேகரமூர்த்தி அவர்களும் அமர்ந்திருக்க பத்திரிகையாளர்கள் சந்திப்பு ஆரம்பமானது.

முதலில் பாடகர் பிரபா அவர்கள் தனது எண்ணங்களையும் பிரபா- 50 இசை நிகழ்ச்சி மற்றும் நிதி சேகரிப்பு முயற்சி ஆகியவை தொடர்பான விடயங்களையும் பகிர்ந்து கொண்டார்.

தொடர்ந்து தமிழ்ச் சமூக மையத்திற்கான நிதி தேவைபற்றியும் அந்தமையத்தின் தேவை பற்றியும் திரு சாந்தா பஞ்சலிங்கம் தெளிவாக எடுத்துரைத்தார்.

தொடர்ந்து சபையிலிருந்து பலரும் தங்கள் கருத்துக்களை எடுத்துரைத்தார்கள்.

கனடா உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லோகேந்திரலிங்கம் அவர்களும் மேற்படி பிரபா-50 இசை நிகழ்ச்சியின் தேவை மற்றும் அதன் மூலம் எமது கனடா வாழ் தமிழர்களுக்கு கிட்டப்போகின்ற உயர்ந்த அங்கீகாரம் ஆகியவை தொடர்பாக எடுத்துரைத்தார்.

ஒரு ஆரோக்கியமான பத்திரிகையாளர்கள் சந்திப்பாகவும் வர்த்தக சமூகத்தின் பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்ட இந்த நிகழ்வு பல நம்பிக்கைகளை தோற்றுவித்தது என்றால் மிகையாகாது.

பாடகர் பிரபா அவர்களை வாழ்த்த விரும்புவோர் 416 357 5327 என்னும் இலக்கத்தை அழைக்கவும்.

Arjune-Local Journalism Initiative Reporter