LOADING

Type to search

இலங்கை அரசியல்

மன்னாரில் கடும் மழைக்கு மத்தியில் மன்னார் மறைமாவட்ட ஆயர் தலைமையில் புத்தாண்டு நள்ளிரவு திருப்பலி.

Share

(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்)

(01-01-2025)

மன்னார் மறைமாவட்டத்தில் புத்தாண்டு நள்ளிரவு திருப்பலி கடும் மழைக்கு மத்தியில் மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் கூட்டுத் திருப்பலியாக ஒப்புக் கொடுக்கப்பட்டது.

31ம் திகதி செவ்வாய்க்கிழமை இரவு 11.45 மணிக்கு மன்னார் மறைமாவட்ட ஆயர் கலாநிதி இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில் குருக்கள் இணைந்து மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் திருவிழா திருப்பலியை கூட்டுத் திருப்பலி ஒப்புக் கொடுத்தனர்.

இதன்போது திருப்பலியின் ஆலயத்திற்கு பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் விசேட பாதுகாப்பை வழங்கியிருந்தனர்.

மேலும் குறித்த திருப்பலியில் பல ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.