கனடா ரொறன்ரொ பிராந்தியத்தில் தமிழர் நிர்வாகத்தில் இயங்கும் நகைக் கடைகளில் தொடர்ச்சியாக இடம்பெறும் கொள்ளைகளை எதிர்கொள்ள சங்கம் ஒன்றை அமைத்து செயற்பட தீர்மானம்
Share
(ரொறன்ரோவிலிருந்து ஆர். என். லோகேந்திரலிங்கம்)
கனடா ரொறன்ரொ பிராந்தியத்தில் தமிழர் நிர்வாகத்தில் இயங்கும் நகைக் கடைகளில் தொடர்ச்சியாக இடம்பெறும் கொள்ளைகளை எதிர்கொள்ள ‘தமிழ் பேசும் நகைக் கடை உரிமையாளகள் சங்கம்’ ஒன்றை அமைத்து செயற்பட அண்மையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது என அறியப்படுகின்றது
கடந்த காலங்களில் பல தமிழ் பேசும் உரிமையாளர்களின் நகைக்கடைகள் குறி வைக்கப்பட்டு கொடிக்கணக்கான தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதும் எனினும் காவல்துறையினர் இந்த கொள்ளை முயற்சிகளை பூரணமாக நிறுத்துவதற்குரிய நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தெரிவித்திருந்தாலும்.இந்த கொள்ளைகளை தடுக்கும் நடவடிக்கைகளை காவல்துறையின் எந்தப் பிரிவினரும் நடவடிக்கைகள் எடுப்பதாகத் தமக்குத் தோன்றவில்லை என்றும் கனடா உதயன் ஆசிரிய பீடத்திற்கு தெரிவித்த நகைக் கடை உரிமையாளர் ஒருவர், இவ்வாறான நிலையில் எமக்கென ஒரு சங்கம் அவசியம் என்று தெரிவித்தார்.
இவ்வாறு இருக்க. கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் உள்ள பர்லிங்டன் நகரில் அமைந்துள்ள பேர்லிங்டன் வர்த்தகத் தொகுதியொன்றில் அமைந்திருந்த நகைக் கடையில் கடந்த 4ம் திகதி சனிக்கிழமையன்று பகல்நேர தாக்குதல் மற்றும் விலையுயர்ந்த நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாகவும் இது குறித்து ஹால்டன் போலீசார் விசாரிக்கின்றனர் எனவும் எமது ஆசிரிய பீடத்திற்கு கிடைத்த செய்திகள் தெரிவிக்கின்றன.
“முக உறைகளை அணிந்த பல சந்தேக நபர்கள் கடையை விட்டு வெளியேறுவதற்கு முன்பு நகைகளை குறிவைத்து காட்சிப் பெட்டிகளை அடித்து நொறுக்கினர்” என்று போலீசார் தெரிவித்தனர்.
எனினும் எவருக்கும் எந்தவொரு காயமும் ஏற்படவில்லை என்று பொலிசார் தெரிவித்தனர், எந்தவொரு கைதுகளும் செய்யப்படவில்லை மற்றும் விசாரணை நடந்து கொண்டிருக்கிறத எனத் தெரிவித்த பொலிசார் ரொறன்ரோவிலும் ரொறன்ரோ பெரும்பாகத்திலும் அண்மைக்காலங்களில் பகல் நேரங்களில் நகைக்கடைகளை தாக்கும் மற்றும் நொறுக்குதல் மற்றும் அள்ளிச் செல்லும் நகை கடை கொள்ளைகளின் எண்ணிக்கை அதிகரிப்பதைக் காண்கின்றோம் எனவும் பொலிசார்ட தெரிவித்தள்ளனர்.
கடந்த ஆண்டு, டொராண்டோவில், 2023 ஆம் ஆண்டில் இதே காலகட்டத்தில் ஒப்பிடும்போது 45 நகை கடை கொள்ளைகள் இடம்பெற்றன என்று போலீஸ் அறிக்கை தெரிவிக்கும் வேளையில் . இது தற்போது 80 சதவீதம் அதிகரித்துள்ளது என்றும் தெரியவருகின்றது.
யோர்க் பிராந்தியத்தில், 14 பயத்தை ஏற்படுத்தம் கொள்ளைகள் இடம்பெற்றன, 2024 ஆம் ஆண்டில் நகைக் கடைகள் வணிகத்திற்காக திறந்திருந்தன, 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது – 100 சதவீதம் அதிகரிப்பு காணப்படுகின்றது என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்னர்.
பீல் பிராந்தியத்தில், இந்த எண்ணிக்கை கிட்டத்தட்ட நான்கு மடங்காக அதிகரித்துள்ளது, இது 2023 இல் 10 கடை கொள்ளைகளிலிருந்து 2024 இல் 39 ஆக உள்ளது. என்பதும் பொலிசாரின் அறிக்கைகளிலிருந்து தெரியவந்துள்ளது.