LOADING

Type to search

கனடா அரசியல்

கொன்சர்வேர்ட்டிவ் கட்சியின் தலைவர் பியர் போய்லீவ்ரே கனடாவின் பிரதமராக பதவி வகிப்பதற்கு பொறுத்தமற்ற ஒருவராவார்.

Share

ஒட்டாவா நகரில் தேசியப் பத்திரிகையாளர்களுக்கு பதிலளிக்கையில் கனடியப் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவிப்பு

கொன்சர்வேர்ட்டிவ் கட்சியின் தலைவர் பியர் போய்லீவ்ரே கனடாவின் பிரதமராக பதவி வகிப்பதற்கு பொறுத்தமற்ற ஒருவராவார். தற்போதைய அரசியல் நிலமையில் பல விடயங்களில் மிகுந்த கவனிப்போடு பணியாற்றி உள்நாட்டு மற்றும் சர்வதேச பிரச்சனைகளுக்கு தீர்வைக் காணவேண்டிய ஒரு கட்டத்தில் எமது தேசம் உள்ளது. அவ்வாறான நிலையில் கனடாவின் அடுத்து பிரதமராக கொன்சர்வேர்ட்டிவ் கட்சியின் தலைவர் பியர் போய்லீவ்ரே தேர்ந்தெடுக்கப்பட்டால் அது நாட்டுக்கு நல்லதல்ல. எனவே தான் நான் உறுதியாக நம்புகின்றேன். எமது லிபரல் கட்சியின் தலைவராக எனக்கடுத்து தேர்ந்தெடுக்கப்படவுள்ள புதிய தலைவர் இந்த நாட்டின் பிரதமராக சிறந்த முறையில் ப ணியாற்றிக்கூடியவராக இருக்க வேண்டும். அப்போது தான் எமது கட்சி அடுத்த பொதுத் தேர்தலிலும் அரசாங்கத்தை கைப்பற்றி கனடிய தேசமும் அதன் மக்களும் எதிர்நோக்குகின்ற பிரச்சனைகளுக்கு தீர்வைக் கண்டு லிபரல் ஆட்சி மீண்டும் தொடரவேண்டும் என்று நான் விரும்புகின்றேன்.

இவ்வாறு ஒட்டாவா மை நகரில் 6ம் திகதி திங்கட்கிமை கனடிய தேசியப் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையில் கனடியப் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்தார். ‘நேசனல் போஸ்ட்’ பத்திரிகையின் சிரேஸ்ட பத்திரிகையாளர் ஒருவர் பிரதமரிடன் கேள்வியை முன்வைக்கும் போது “தங்களுக்குப் பிறகு லிபரல் கட்சியை வழிநடத்தும் தலைவராக தேர்ந்தெடுக்கப்படவுள்ளவர். உங்களைப் போன்றோ அன்றி உங்களிலும் பார்க்க திறமைசாலியாக இருப்பார் என்று நீங்கள் எதிர்பார்க்கின்றீர்களா? என்ற கேள்வியை முன்வைத்த போதே,பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தனது பதிலில் தொடர்ந்து தெரிவிக்கையில் ” கொன்சர்வேர்ட்டிவ் கட்சியின் தலைவர் பியர் போய்லீவ்ரே கனடாவின் பிரதமராக பதவி வகிப்பதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டால் எமது நாடு பல சர்வதேச பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டிவரும். உதாரணமாக உலகம் மாசடையும் அல்லது வெப்பமயமாகும் விடயத்திற்கு உலக நாடுகள் ஒன்றாகக் கைகோர்த்து நிற்கும் முயற்சிக்கு தான் ஆதரவு வழங்க மாட்டேன் என்று தொடர்ச்சியாக கொன்சர்வேர்ட்டிவ் கட்சியின் தலைவர் பியர் போய்லீவ்ரே தெரிவித்து வருகின்றார். எனவே இவ்வாறான அவரது போக்கு உலக நாடுகள் மத்தியில் எமது கனடாவிற்கு அவப் பெயரை ஈட்டித் தந்து விடும்’ என்றும் அவர் எச்சரித்தார்.”

-கனடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பலராலும் எதிர்பார்க்கப்பட்ட வண்ணம் 6ம் திகதி திங்கட்கிழமையன்று ஒட்டாவா மாநகரில் உள்ள அவரது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தின் முற்றத்தில் செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தினார். அந்த செய்தி மாநாட்டில் அவர் தனது ராஜினாமா திட்டங்களை அறிவித்தார்.

அங்கு அவர் கோவிட் -19 தொற்றுநோய்களின் போது பல மாதங்களாக தேசத்தை பாதுகாக்க தானும் தனது அரசும் எவ்வாறு உழைத்தது என்பது குறித்து அவர் ஆரம்பத்தில் உரையாற்றினார், மேலும் அவரது உள்ளுணர்வு தொடர்ந்து இருக்க வேண்டும் என்று கூறினார், தனது சொந்த கட்சியில் உள்ள சிலரால் அந்த முயற்சி தற்போது சாத்தியமற்றதாக ஆகியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்..

மேலும் கனடிய லிபரல் கட்சிக்கு ஒரு புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை லிபரல் கட்சித் தலைவராகவும் பிரதமராகவும் தான் தொடர்ந்து பதவிகளில் இருக்க விரும்புவதாகவும் அவர் கூறினார்.

அவர் அங்கு உரையாற்றும் போது அவரது கண்கள் சிவந்தும் கண்ணீர் சிந்துவது போன்றும் காட்சியளித்தன. துக்கம் அவரது தொண்டையை அடைப்பது போன்று அவர் முகம் காட்சியளித்தது. சொற்களை உச்சரிக்கும் பொழுது நிதானமாகவும் மெதுவாகவும் அவர் பேசினார்

“என் நண்பர்களே, நான் ஒரு போராளி என்பதை நீங்கள் அனைவரும் அறிவது போல, என் உடலில் உள்ள ஒவ்வொரு எலும்பும் இரத்தமும் எப்போதும் என்னை எதிர்த்துப் போராடச் சொல்பவையாகவே விளங்கின, ஏனென்றால் நான் எமது கனடியர்களைப் பற்றி ஆழ்ந்த அக்கறை காட்டுகிறேன். நான் இந்த நாட்டைப் பற்றி ஆழ்ந்த அக்கறை காட்டுகிறேன், ”என்று அவர் கூறினார். “கட்சித் தலைவராக ராஜினாமா செய்ய நான் விரும்புகிறேன், கட்சி தனது அடுத்த தலைவரை ஒரு வலுவான நாடு தழுவிய போட்டி செயல்முறை மூலம் தேர்ந்தெடுத்த பிறகு பிரதமர் பதவியையும் நான் விலகிச் செல்வேன்.

“இந்த நாடு அடுத்த தேர்தலில் ஒரு உண்மையான தேர்வுக்கு தகுதியானது, நான் கட்சிக்குள்ளேயே போராட வேண்டியிருந்தால், அந்தத் தேர்தலில் நான் சிறந்த ஒரு வேட்பாளராக முன்வருவதற்கு விருப்பம் இல்லாமல் இருந்தது என்பதும் எனக்குத் தெளிவாகத் தெரிகிறது.” என்றும் பிரதமர் ஜஸ்ரின் தெரிவித்தார்.

திங்கள்கிழமை அதிகாலை ஆளுனர் நாயகம் மேரி சைமனை சந்தித்ததையும், மார்ச் 24 வரை பாராளுமன்றத்திற்கு அவரது ஒப்புதலைப் பெற்றதையும் ட்ரூடோ உறுதிப்படுத்தினார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில் ‘ டிசம்பர் நடுப்பகுதியில் கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட் தனது நிதி அமைச்சரு; பதவியிலிருந்து விலகிய பின்னர், நான் எனது சக லிபரல் கட்சியின் எம்.பி.க்களின் பெரும்பகுதியினரின் அழுத்தத்தை எதிர்கொள்ள வேண்டியேற்பட்டது. கட்சியின் ஒன்டாரியோ, அட்லாண்டிக் மற்றும் கியூபெக் காகஸ்களில் உள்ள பெரும்பான்மையான எம்.பி.க்களிடமிருந்து எனக்கு தொடர்ச்சியான அழைப்புகள் வந்த வண்ணம் இருந்தன. என்றும் கவலையுடன் தெரிவித்தார்

இது இவ்வாறிருக்க, 8ம் திகதி புதன்கிழமை அவசரமாகக் கூட்டப்படவுள்ள லிபரல் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொள்ளவுள்ள ‘அங்கத்தவர்கள்’ கூட்டத்திற்கு முன்னர் ட்ரூடோ தனது நோக்கங்களை அறிவிப்பார் என்றும் நம்பப்படுகின்றது.