LOADING

Type to search

கனடா அரசியல்

TAMIL HERITAGE MONTH CELEBRATIONS HOSTED BY ‘DURHAM TAMIL ASSOCIATION’

Share

சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்பெற்றிருந்த டுறம் தமிழர் சங்கம்’ அமைப்பு நடத்திய ‘தமிழர் மரபுரிமை மாத’க் கொண்டாட்டம்

 

கடந்த 26-01-2024 அன்று ஞாயிற்றுக்கிழமை ஏஜக்ஸ் நகரில் நடைபெற்ற தமிழர் மரபுரிமை மாதக் கொண்டாட்டம் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்பெற்றிருந்தது.

கனடாவில் வெற்றிகரமாக இயங்கிவரும் ‘டுறம் தமிழர் சங்கம்’ அமைப்பு நடத்திய ‘பொங்கல் விழா மற்றும் தமிழர் மரபுரிமை மாதக் கொண்டாட்டம்’ வைபவத்தில் மத்திய அமைச்சர்கள் ஹரி ஆனந்தசங்கரி மற்றும் மார்க் கொலன்ட் ஆகியோரும் இன்னும் மாநகரசபை உறுப்பினர்கள் மற்றும் மேயர்கள் என அரசியல் பிரமுகர்கள் நிறைந்து வந்து மண்டபத்தை அழகும் ஆளுமையும் கொண்டதாக ஆக்கினார்கள்.

மேற்படி அமைப்பின் தற்போதைய தலைவர் ஹாந்தன் மாணிக்கவாசகர் அவர்கள் மற்றும் ‘டுறம் தமிழர் சங்கம்’ அமைப்பின் நிர்வாகசபையினர். அனைவரும் சேர்ந்து விழாவை சிறப்பான முறையில் மிகுந்த பொருட்செலவில் ஏற்பாடு செய்திருந்தார்கள்.

விழா நிகழ்ச்சிகளை நிர்வாக சபை உறுப்பினரும் அறிவிப்பாளருமான மதி மதிசயன் அவர்கள் தொகுத்து வழங்கினார்

நடனங்கள்- இசைக் கச்சேரிகள்- உரைகள் என அன்றைய விழா தொடர்ச்சியாகக் களை கட்டி நின்றது. கனடா உதயன் பத்திரிகை சார்பில் அதன் பிரதம ஆசிரியர் அங்கு கலந்து கொண்டார்.