LOADING

Type to search

இலங்கை அரசியல்

தெல்லிப்பளை மகாஜனா கல்லூரி பெண்கள் உதைப்பந்தாட்ட அணி இலங்கை தேசியமட்டத்தில் சாம்பியனானது

Share

பு.கஜிந்தன்

இலங்கைப் பாடசாலைகள் உதைபந்தாட்டச் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் 14 வயதுப் பெண்கள் அணிகளுக்கிடையில், தேசிய மட்டத்தில் நடாத்திய உதைபந்தாட்டப் போட்டியில் தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரி சாம்பியனாகியுள்ளது.

இப்போட்டி 07.02.2025 அன்று வெள்ளிக்கிழமை கொழும்பு றேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.

தெல்லிப்;பளை மகாஜனக் கல்லூரியை எதிர்த்து குருதாகல் மலியதேவ மகளிர் கல்லூரி மோதியது. இப்போட்டி ஆட்டநேர நிறைவில் 1:1 என சமநிலையானது. வெற்றி – தோல்வியை தீர்மானிக்கும் சமநிலை தவிர்ப்பு உதையில் மகாஜனக் கல்லூரி 3:2 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்று சாம்பியனாகியது.