LOADING

Type to search

இலங்கை அரசியல்

யாழ்ப்பாணம் மூளாயில் நடைபெற்ற அமரர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் உருவச்சிலை திறப்பும் அமிர்தலிங்கம் – மங்கையற்கரசி நினைவில்லம் அங்குரார்ப்பணமும்!

Share

பு.கஜிந்தன்

முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் உருவச்சிலை திறப்பும் அமிர்தலிங்கம் – மங்கையற்கரசி நினைவில்லம் அங்குரார்ப்பண நிகழ்வும் 12ம் திகதி புதன்கிழமையன்று மூளாயில் உள்ள அன்னராரது இல்லத்தில் நடைபெற்றது.

அமிர்தலிங்கம் நினைவு அறக்கட்டளையினர் ஏற்பாட்டில், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தலைமையில இடம்பெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக வடமாகாண ஆளுனர் நா.வேதநாயகன், யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதர் சாய் முரளி ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். அத்துடன் , வட மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே சிவஞானம் உட்பட அரசியல்வாதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

வரவேற்புரையினை அன்னரது புதல்வர் Dr.அமிர்தலிங்கம் பகீரதன் நிகழ்த்தினார். அமிர்தலிங்கம் அவரது வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள அன்னாரது உருவச் சிலையனை வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் அவர்கள் திறந்து வைத்தார்.

அமிர்தலிங்கம் – மங்கையற்கரசி நினைவு இல்லத்தினை இந்திய துணைத் தூதர் சாய் முரளி திரை நீக்கம் செய்த வைத்தார். இந்த நினைவில்லத்தில் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் அமுதலிங்கம் அவர்கள் பயன்படுத்திய பொருட்கள் அவரது அரசியல் வரலாற்று பயணத்தினை நினைவுபடுத்தும் புகைப்படங்கள் என்பன காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.