17ந் திகதி மறைந்த திருமதி விசாகபூசணம் முருகையா அவர்களின் 31ம் நாள் நினைவு தாயகத்திலும், ரொறன்ரோவிலும் ஒரே நாளில் அனுஸ்டிக்கப்பெற்றது
Share

தமிழ் ஆசிரியையாக ரொறன்ரோவிலும், மொன்ரியாலிலும் சேவையாற்றி கடந்த ஜனவரி 17ந் திகதி மறைந்த திருமதி விசாகபூசணம் முருகையா அவர்களின் 31ம் நாள் நினைவு தாயகத்திலும், ரொறன்ரோவிலும் ஒருசேர அனுஸ்டிக்கப்பட்டது. தாயகத்தில் தொல்புரம் ‘சர்வோதயா’ அமைப்பின் ஏற்பாட்டில் தொல்புரம், மூளாய், சுழிபுரம் கிராமத்தினரின் பங்கேற்புடன் பெப்ரவரி 16ந் திகதி விசாகபூசணம் முருகையா ரீச்சர் நினைவு கூரப்பட்டார். அதே தினம் கனடாவில் ரொறன்ரோ கனடா கந்தசாமி ஆலயத்திலும் நினைவுகூரல் நடைபெற்றது. ரொறன்ரோ நிகழ்வை மறைந்த ஆசிரியை அவர்களின் புதல்வரும் இலக்கியவாதியுமாகிய மொன்றியால் மூர்த்தி தனது குடும்பத்தினரோடு இணைந்து ஏற்பாடு செய்திருந்தார். .