LOADING

Type to search

இலங்கை அரசியல்

யாழ்ப்பாணம் புத்தூரில் திடீரென மயங்கி விழுந்த ஆணொருவர் உயிரிழப்பு!

Share

பு.கஜிந்தன்

யாழ்ப்பாணம் புத்தூர் கிராமத்தில் 22ம் திகதி சனிக்கிழமை அன்றையதினம் திடீரென மயங்கி விழுந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பு – ஏறாவூர் பகுதியைச் சேர்ந்த முகமதுஹனீபா முகமதுசமீபா (வயது 49) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
இவர் கடந்த ஒன்றரை வருடகாலமாக புத்தூர் பகுதியில் உள்ள விடுதியில் சமையல் வேலைகளில் ஈடுபட்டு வந்துள்ளார். 22ம் திகதி சனிக்கிழமை மாலை மூச்செடுக்க சிரமப்பட்ட இவர் திடீரென மயங்கி விழுந்துள்ளார்.
மயங்கி விழுந்தவர் அங்கேயே உயிரிழந்துள்ளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். மாரடைப்பு காரணமாக மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.