LOADING

Type to search

இலங்கை அரசியல்

மட்டக்களப்பு செங்கலடியில் விவசாயிடம் 50 ஆயிரம் ரூபா இலஞ்சம் வாங்கிய கமநல உத்தியோகத்தர் ஒருவர் இலஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவினரால் கைது

Share

(கனகராசா சரவணன்)

மட்டக்களப்பு சித்தாண்டியில் விவசாயி ஒருவரின் வயலுக்கு உரம் மற்றும் மழை வெள்ளத்தால் சேதடைந்ததற்கு நஷ்டஈடு பெற்றுதருவதற்கு 50 ஆயிரம் ரூபா பணத்தை இலஞ்சமாக பெற்றுக் கொண்ட வந்தாறுமூலை கமநலஅபிவிருத்தி திணைக்கள உத்தியோகத்தார் ஒருவரை மாறுவேடத்தில் இருந்த இலஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவினரால் 5ம் திகதி அன்று புதன்கிழமை பகல் செங்கலடி பிரதேசத்தில் வைத்து கைது செய்துள்ளதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர்.

இதுபற்றி தெரியவருவதாவது

சித்தாண்டி பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவரின் வயலுக்கு உரம் பெற்று தருவதாகவும் அத்துடன் மழை வெள்ளத்தால் வேளாண்மை சேதமடைந்ததற்கு நஷ்டஈடு பெற்று தருவதாகவும் அதற்கு 50 ஆயிரம் ரூபா பணத்தை விவசாயிடம் இலஞ்சமாக கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் கோரியுள்ளார்.

இதனையடுத்து குறித்த விவசாயி கொழும்பிலுள்ள இலஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவினரிடம் முறைப்பாட்டையடுத்து அவர்களின் ஆலோசனைக்கமைய சம்பவ தினமான அன்று பகல் செங்கலடி பகுதியிலுள்ள வங்கி ஒன்றிற்கு அருகாமையில் கொழும்பில் இருந்து வந்த இலஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவினர் கண்காணித்துக் கொண்டிருந்த நிலையில் விவசாயிடம் கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் 50 ஆயிரம் ரூபாவை இலஞ்சமாக பெற்றுக் கொண்ட நிலையில் அங்கு மாறுவேடத்தில் இருந்த இலஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவினர் சுற்றிவளைத்து கைதுசெய்ததுடன் இலஞ்சமாக பெற்றுக் கொண்ட 50 ஆயிரம் ரூபாவை மீட்டனர்.

இதில் கைது செய்யப்பட்டவர் 34 வயதுடையவர் எனவும் இவரை நீதிமன்றில் ஆஜர்படுத்தி கொழும்புக்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கையை இலஙஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவினர் மேற்கொண்டுவருவதாக பொலிசார் தெரிவித்தனர்.