அட்டாளைச்சேனை பாலமுனை பகுதியில் மரமொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் சடலம் காணப்படுவதாக பொலிஸார் தெரிவிப்பு.
Share

(கனகராசா சரவணன் )
அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள அட்டாளைச்சேனை முள்ளிமலையடி பிரதேசத்தில் மரம் ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் உருக்குலைந்துள்ள சடலம் ஒன்று இருப்பதாக பொதுமக்கள்; புதன்கிழமை 5ம் திகதி மாலை தகவல் தெரிவித்துள்ளதாக அக்கரைப்பற்று பொலிசார் nதிவித்தனர்.
குறித்த பிரதேசத்தில் கடந்த ஒரு கிழமையாக துர்நாற்றம் வீசி வந்துள்ள நிலையில் சந்தேகம் கொண்ட இப்பகுதி மக்கள் அநத பகுதியை சுற்றி சோதனையிட்டபோது அங்கு மரத் ஒன்றில் hக்கில் தொங்கி உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் ஒன்று இருப்பதைகண்டு பொலிசாருக்கு தெரிவித்தனர்
இதனையடுத்து குறித்த பகுதியில் யானைகள் நடமாடுவதால் அங்கு பொலிசார் செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் வியாழக்கிழமை 6ம் திகதி அன்று காலையில் சென்று சடலத்தை மீட்பதற்கான அனைத்து நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள தாகவும் இதுவரை சடலம் அடைiயாளம் காணப்படவில்லை என பொலிசார் தெரிவித்தனர்
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.