LOADING

Type to search

இலங்கை அரசியல்

மன்னாரில் சிறப்பாக இடம்பெற்ற வடக்கு மாகாண இப்தார் நிகழ்வில் வடமாகாண ஆளுநர் அவர்களும் பங்கெடுத்தார்

Share

(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்)

(12-03-2025)

வடக்கு மாகாண கல்வி ,பண்பாட்டலுவல்கள்,விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் அலகு ஏற்பாடு செய்த வடக்கு மாகாண இப்தார் நிகழ்வு 12ம் திகதி அன்று புதன்கிழமை மாலை வடக்கு மாகாண பிரதம செயலாளர் ம.பற்றிக் டிறஞ்சன் தலைமையில் மன்னார் எருக்கலம் பிட்டி மகளிர் கல்லூரியில் இடம் பெற்றது.

சர்வமத தலைவர்களின் பங்குபற்றலுடன் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் , சிறப்பு விருந்தினர்களாக மற்றும் மன்னார் மாவட்ட செயலாளர் க. கனகேஸ்வரன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

மேலும் வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் , மன்னார் மடு வலயக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் மன்னார் பிரதேச செயலாளர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகின் பிரதிப் பணிப்பாளர் திருமதி லாகினி நிருப ராஜ் குறித்த நிகழ்வுகளுக்கான திட்டமிடல் மேற் பார்வைகளை முன்னெடுத்ததோடு,மன்னார் எருக்கலம் பிட்டி மகளிர் கல்லூரி சமூகத்தினர் ஒழுங்கமைப்புக்கள் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.