LOADING

Type to search

இலங்கை அரசியல்

கிழக்கில் பிள்ளையான் வியாழேந்திரன் தலைமையில் கிழக்கு தமிழர் கூட்டமைப்பு உதயம்

Share

சிங்களவர்களுக்கு மாத்திரமல்ல தமிழர்களுக்கும் பாதகமான ‘கூட்டு’ இது என கிழக்கிலங்கையில் விமர்சனம்

(கனகராசா சரவணன்)

‘கிழக்கு தமிழர் கூட்டமைப்பு’ எனும் புதிய கூட்டமைப்பு பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி மற்றும் சதாசிவம் வியாழேந்திரன் தலைமையிலான முற்போக்கு தமிழர் கழகத்தினரும் இடையிலான உத்தியோகபூர்வ புரிந்துணர்வு கைச்சாத்திடும் நிகழ்வு 15ம் திகதி அன்று சனிக்கிழமை காலை 10 மணியளவில் மட்டக்களப்பு ரிவேரா விடுதியில் இடம் பெற்றுள்ளது.

கிழக்குத் தமிழர்களின் வளர்ச்சியையும் சுபிட்ஷத்தையும் கருத்தில் கொண்டு பல்லின சிக்கல்களுக்கு முகம் கொடுக்கும் வண்ணம் பலமிக்க அரசியல் சக்தி ஒன்றினை கட்டமைக்கும் முயற்சியில் ‘கிழக்கு தமிழர் கூட்டமைப்பு’ எனும் புதிய கூட்டமைப்பு இன்று உதயமானது.

இதன் முதற்கட்டமாக ர சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சிக்கும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தலைமையிலான முற்போக்கு தமிழர் கழகத்தினருக்கும் இடையிலான உத்தியோகபூர்வ புரிந்துணர்வு கைச்சாத்திட்டனர்

இந்த ஒற்றுமைக்கான பயணத்தில் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கிழக்கை அடிப்டையாகக் கொண்டு இயங்கும் அரசியல் சக்திகள் அனைவரையும் ஒன்றிணைத்து போட்டியிட உள்ளதோடு எதிர்காலத்தில் பல்வேறு தமிழ் அரசியல் கட்சிகளையும் சிவில் சமூக ஆர்வலர்களையும் ஒன்றிணைத்து அதனுடாக எதிர்காலத்தில் கிழக்குத் தமிழர்களின் அரசியல், சமூக பாதுகாப்பு அரணாக பலம்பொருந்திய கட்டமைப்பாக இது செயல்படவுள்ளது என தெரிவித்தனர்.

இதேவேளை இந்த செய்தி வெளியான சில மணிநேரங்களில் “சிங்களவர்களுக்கு மாத்திரமல்ல தமிழர்களுக்கும் பாதகமான ‘கூட்டு’ இது” என கிழக்கிலங்கையில் விமர்சனங்கள் எழுந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது