LOADING

Type to search

இலங்கை அரசியல்

மட்டக்களப்பில் நடைபெற்ற கவிமகள் ஜெயவதியின் ‘எழுத்துக்களோடு பேசுகிறேன்’ கவிதைத் தொகுப்பு வெளியீட்டு விழா

Share

((கனகராசா சரவணன்)

கவிமகள் ஜெயவதியின் எழுத்துக்களோடு பேசுகிறேன் கவிதைத் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா மட்டக்களப்பில் தமிழ் சங்க மண்டபத்தில் சங்கத்தின் தலைவர் சைவப்புரவலர் வி.ரஞ்சிதமூர்த்தி தலைமையில் கடந்த 13ம் திகதி வியாழக்கிழமை (13) வெளியீட்டு வைக்கப்பட்டது

இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகம் கிழக்கு பல்கலைக்கழகத்தின் பணிப்பாளர் பேராசிரியர் புளோரன்ஸ் பாரதி கென்னடி கலந்து கொண்டு முதல் நூலை பெற்று அதனை வெளியீட்டுவைத்தார்

மங்கள விளக்கேற்றலோடு ஆரம்பிக்கப்பட்டு EPAND அமைப்பின் சிறுவர் கழக உறுப்பினரான நிகேஷ்; தமிழ்மொழி வாழ்த்தினை தொடர்ந்து வரவேற்பு நடனமானது இடம்பெற்றது இடம்பெற்றது

அதனை தொடர்ந்து கதிரவன் கலை கழகத்தினுடைய தலைவர் கதிரவன் இன்பராசா அறிமுக உரையினையடுத்து சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகம் கிழக்கு பல்கலைக்கழகத்தின் முதுநிலை விரிவுரையாளர் திரு.க.மோகனதாசன்; நயவுரையாற்றினர்.

மகரகம தேசிய கல்வி நிறுவகம் தமிழ்மொழி துறை பணிப்பாளர் கலாநிதி முருகு தயாநிதி , மட்டக்களப்பு உயர்தொழில்நுட்ப கல்லூரியினுடைய பணிப்பாளர் செல்வரத்தினம் ஜெயபாலன் ஆகியோர்களின் அதிதிகளாக கலந்துகொண்டு உரையாற்றினர்

அதனை தொடர்ந்து நூலாசிரியர் கவிமகள் ஜெயவதி ஏற்புரை இடம் பெற்றதை தொடர்ந்து EPAND அமைப்பினர்களாலும் கதிரவன் கலைக்கழக உறுப்பினர்களாலும் தமிழ் சங்கத்தின் உறுப்பினர்களாலும் நூலாசிரியருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவம் வழங்கப்பட்டது A

தொடர்ச்சியாக வருகை தந்த கஐலுஞர்களுக்கு நூலாசிரியரின் கரங்களால் நூல் பிரதிகள் வழங்கப்பட்டு சுகுணதாஸ் சசிகுமார் நன்றியுரையுடன் நிகழ்வானது இனிதே நிறைவடைந்தது…