LOADING

Type to search

இலங்கை அரசியல்

யாழ்ப்பாணத்தில் கைது செய்ய சென்ற பொலிஸார் மீது தாக்குதல் நடாத்திவிட்டு தப்பிச் சென்ற நபர்!

Share

19ம் திகதி புதன்கிழமை அன்றையதினம் யாழில் – தெல்லிப்பழையில், தன்னைக் கைது செய்ய வந்த பொலிஸார் மீது சந்தேகநபர் ஒருவர் தாக்குதல் நடாத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த சந்தேகநபரை கைது செய்யுமாறு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது. நீதிமன்றத்தின் கட்டளையை நிறைவேற்றுவதற்காக தெல்லிப்பழை பொலிஸார் குறித்த சந்தேகநபரை கைது செய்வதற்கு சென்றனர்.

இதன்போது குறித்த சந்தேகநபர் தகாத வார்த்தைப் பிரயோகங்களை பிரயோகித்து, பொலிஸார் மீது கொட்டனால் தாக்குதல் நடாத்தியுள்ளார். பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

தாக்குதலுக்கு உள்ளான பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். குறித்த சந்தேகநபரை தேடி தெல்லிப்பழை பொலிஸார் வலைவீசி வருகின்றனர்.