இலஞ்சம் வாங்கியதற்கு உடந்தையாக இருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ்வியாழேந்திரன் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது
Share

(கனகராசா சரவணன்)
கடந்த வருடம் 15 இலச்சம் ரூபா இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் செயலாளர் அமைப்பாளர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் அடிப்படையில் அதற்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் 25ம் திகதி செவ்வாய்க்கிழமை எஸ்.வியாழேந்திரனை கெழும்பு புதுக்கடை பகுதியில் வைத்து இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினரால் கைது செய்துள்ளதாக பொலிஸ் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
கடந்த 2024 ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி மண் அகழ்விற்கு அனுமதி பெற்றுதருவதாக வர்த்தகர் ஒருவரிடம் 15 இலச்சம் ரூபாவை இலஞ்சமாக முன்னாள் இராஜாங்க அமைச்சரின் செயலாளர் மற்றும் பிரதேச அமைப்பாளர் ஆகிய இருவரும் மட்டக்களப்பு கல்லடி கடற்கரைப்பகுதியில் வைத்து இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக முன்னாள் அமைச்சரிடம் விசாரணைகளை மேற்கொண்டுவந்த இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினர் குறித்த சம்பவத்துக்கு உடந்தையாக அமைச்சர் இருந்துள்ளார் என கண்டறிந்தனர் இந்த நிலையில் நீதிமன்றின் கவனத்துக்கு கொண்டுவந்த நிலையில் அமைச்சரின் செயலாளரின் வழக்கு விசாரணைக்காக செயலாளர் அமைப்பாளருடன் சம்பவதினமான 215ம் திகதி செவ்வாய்க்கிழமை புதுக்கடை நீதிமன்ற பகுதிக்கு முன்னாள் அமைச்சர் சென்றுள்ள நிலையில் அவரை அங்கு வைத்து இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினர் கைது செய்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட அமைச்சiரை புதுக்கடை நீதிமன்றில் ஆஜர்படுத்தியதையடுத்து அவரை எதிர்வரும் ஏப்பிரல் முதலாம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
இதேவேளை கடந்த 2022ம் ஆண்டு யூன் 21ம் திகதி அவரது பிரத்தியோக செயலாளராக இருந்த சகோதரர் காணி ஒன்றிற்கு 15 இலச்சம் ரூபா இலஞ்சம் வாங்கிய நிலையில் மட்டக்களப்பு நகரிலுள்ள உணவகம் ஒன்றில் வைத்து இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது