LOADING

Type to search

இலங்கை அரசியல்

மன்னார் – முசலியில் இரு மீனவ சமூகங்களுக்கிடையில் மத ஒற்றுமையை மேம்படுத்தும் வகையில் இடம்பெற்ற இப்தார் நிகழ்வு

Share

(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்)

(26-03-2025)

இரு மீனவ சமூகங்களுக்கிடையில் மத ஒற்றுமையை மேம்படுத்தும் வகையில் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனம் ஏற்பாடு செய்த நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்வு 25ம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை முசலி பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள கொண்டச்சி பாடசாலையில் இடம் பெற்றது.

மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ தலைமையில் பணியாளர்கள் இணைந்து குறித்த நிகழ்வை ஏற்பாடு செய்தனர்.

இதன் போது முசலி பிரதேசத்தில் உள்ள முஸ்லிம் இளம் மீனவர்களும் தமிழ் இளம் மீனவர்களும் குறித்த இப்தார் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இரு மீனவ சமூகங்களுக்கு இடையில் உள்ள ஒற்றுமை,சகோதரத்துவத்தை மேம்படுத்தும் வகையிலும்,அவர்களுக்கிடையில் புரிந்துணர்வு ஏற்படும் வகையிலும் குறித்த இப்தார் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.