LOADING

Type to search

இலங்கை அரசியல்

யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்திக்கான கூட்டத்தில் “ஆளுமையற்ற ஒருங்கிணைப்புக் குழு தலைவர்” என்று கூறிவிட்டு -வெளியேறிய பாராளுமன்ற உறுபிப்பினர் சிவஞானம் சிறீதரன்!

Share

மீன்வளத்துறை அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகரன் தொடர்பாகவே இந்த கண்டன வீச்சு இடம்பெற்றதாகத் தகவல்

“யாழ்ப்பாண மாவட்டத்தின் அபிவிருத்திக்கான கூட்டம் என்று அதிகாரிகளை அழைத்து, அழைத்தவர்களாலேயே அதிகாரிகள் மீது குறைகளும் குற்றச்சாட்டுக்களும் முன்வைத்து நேரத்தை வீணாக்கும் செயற்பாடானது ஒருங்கிணைப்பு குழு தலைவரின் இயலாமையே “என சுட்டிக்காட்டிய நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன்,ஆழுமையற்ற தலைவரின் கீழ் நடக்கும் கூட்டத்தில் இருப்பது மக்களை நாம் ஏமாற்றுவதாக காணப்படுவதால் தான் கூட்டத்தில் இருந்து வெளியேறியதாக தெரிவுத்தார்.

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் 25ம் திகதி செவ்வாய்க்கிழமை அன்று யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூட்டத்தில் நடைபெற்றது.

இதன்போது சமர்ப்பிக்கப்பட்ட விடயங்களை ஆராயாது சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசியல் நோக்கமாக கூட்டத்தை நகர்த்திச் சென்றனர்.

ஆனால் உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்படுள்ள நிலையில் சட்டத்தின் பிரகாரம் குறித்த கூட்டத்தில் அரசியல் நோக்கங்களுக்கான விவாதங்கள் முன்மொழிவுகள் எவையும் இடம்பெறக் கூடாது. இன்று அரசியலே கூட்டமாக காணப்பட்டது. அதைவிட தனிப்பட்ட தாக்குதல்களும் அவதூதுகளும் அதிகளவு இருந்தது.

இதை கூட்டத்துக்கு தலைமை தாங்கும் நபர் கட்டுப்படுத்த வேண்டும். அதுவே தலைமையின் பணியும் ஆகும். ஆனால் ஒருங்கிணைப்புக் குழு தலைவரால் அதை கட்டுப்படுத்தும் இயலுமை காணப்படவில்லை.

அந்தவகையில் ஆழுமையற்ற தலைமையின் கீழ் நடக்கும் கூட்டத்தில் ஆராயப்படும் தீர்மானங்களுடன் கூட்டத்தில் இருப்பதும் பிரயோசனமற்றது எனவே இந்த கூட்டத்தில் இருந்து நேரத்தை வீணடிப்பது தேவையற்றது என்பதால் தான் கூட்டத்தில் இருந்து வெளியேறிச் சென்றதாகவும் அவர் தெரிவித்தார். இது இவவாறிக்க. இலங்கையின் மீன்வளத்துறை அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகரன் தொடர்பாகவே இந்த கண்டன வீச்சு இடம்பெற்றதாக யாழ்ப்பாண செயலக வட்டாரத்தில் குறிப்பிட்டுச் சொல்லப்பட்டதாகவும் எமது செயதியாளர் அறிவித்துள்ளார்.