Type to search

கனடா அரசியல் கனடா சமூகம்

Re-opening Ceremony of the Saravanaa Bavan Vegetarian Restaurant in Mississauga was very graceful.

Share

சரவணா பவன் சைவ உணவகத்தின் திருத்தியமைக்கப்பெற்ற கிளையின் திறப்பு விழா

கனடாவில் நான்கு கிளைகளைக் கொண்டு சிறப்பாக இயங்கிவரும் தமிழ்நாட்டை தலைமையாகக் கொண்ட ‘சரவணா பவன்’ சைவ உணவகத்தின் மிசிசாகா கிளையானது அண்மையில் திருத்தியமைக்கப்பெறுவதற்காக இரண்டு மாதங்கள் மூடப்பட்டு வேலைகள் நடைபெற்றன.

மிக அழகியதாக உள்ளேயும் வெளியேயும் திருத்தப்பெற்றுள்ள இந்தக் கிளையின் திறப்பு விழா 26–03-2025 புதன்கிழமை அன்று மதியம் நடைபெற்றது.

வர்த்தகப் பிரமுகர் கணேசன் சுகுமார் அவர்களைத் தலைவராகக் கொண்டு இயங்கிவரும் கனடாவின் நான்கு கிளைகளிலும் தமிழ்நாட்டிலிருந்து அழைக்கப்பெற்ற சமையல் வல்லுனர்களே பணியாற்றுகின்றார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

மேற்படி மிசிகாசா நகரத்தில் 4559 Hurontario St Mississauga Market Place, Mississauga, Ontario L4Z 3L9 என்னும் விலாசத்தில் அமைந்துள்ள கிளையில் மீள் திறப்பு விழாவில் பல பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் நகரசபை உறுப்பினர்கள் மற்றும் வர்த்தகப் பிரமுகர்கள் மற்றும் பத்திரிகை ஆசிரியர்கள் என நூற்றுக்கணக்கானவர்கள் அழைக்கப்பெற்றிருந்தனர்.

வர்த்தகப் பிரமுகர் கணேசன் சுகுமார் அவர்கள் ஏனை வைத்தியசாலைகளுக்கு நிதி அன்பளிப்புகளை வழங்கிவரும் ஒரு அன்பர் என்பது அனைவரும் அறிந்தவிடயமே. இந்த வகையில் அன்றைய திறப்பு விழாவில் அவர் சார்பாக ஒரு தொகை நிதி மிசிசாகாவில் வைத்திய சேவையாற்றிவரும் வைத்தியசாலைக்கு வழங்கப்பெற்றது மனதைக் குளிரவைத்த ஒரு அம்சமாக நேற்றைய வைபவத்தில் காணப்பட்டதை உணரக் கூடியதாக இருந்தது.
உணவகத்தின் Phone Number :-905 290 0769-

படங்களும் செய்தியும்:- சத்தியன்