கனடா- ‘யாழ் – கந்தர்மடம் மக்கள் ஒன்றியம்’ தனது வெற்றிகரமான 30 வது ஆண்டு நிறைவை 22-03-2025 அன்று ஸ்காபுறோவில் கொண்டாடியது
Share

கடந்த 30 ஆண்டுகளாக கனடாவின் ரொறன்ரோ மாநகரில் இயங்கிவரும் ‘யாழ்-கந்தர்மடம் மக்கள் ஒன்றியம்’ தனது வெற்றிகரமான 30 வது ஆண்டு நிறைவை 22-03-2025 அன்று ஸ்காபுறோவில் கொண்டாடியது.
மேற்படி ஒன்றியத்தின் இயக்குனர் சபை மற்றும் பொதுச் சபையின் உறுப்பினர்கள் அனைவரும் ஒருமித்து மேற்கொண்ட ஏற்பாடுகளால் அன்றைய விழா சிறப்பாக நடைபெற்றது.
மேற்படி ஒன்றியத்தின் கடந்த கால இயக்குனர் சபைகளில் பணியாற்றிய பல அன்பர்கள் தொடர்ச்சியாக ஒன்றியத்தின் வளர்ச்சிக்கு அர்ப்பணித்து வருகின்றார்கள்.
அன்றை விழாவில் ‘ஆரோசை’ இசைக்குழுவின் மெல்லிசை நிகழ்ச்சியும் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பெற்றிருந்தது.
மேற்படி ஆண்டு விழாவில் கந்தர்மடத்தையும் அதனைச் சுற்றியுள்ள இடங்களைச் சேர்ந்தவர்கள் மாத்திரமன்றி இயக்குனர் சபை உறுப்பினர்களின் நண்பர்கள் மற்றும் வர்த்தகப்பிரமுகர்கள் என நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து சிறப்பித்தனர்;
படங்களும் செய்தியும்: சத்தியன்