Boxgrove Seniors Community Wellness Club அமைப்பு நடத்திய புத்தாண்டு விழாவில் சமூகப் பணியாற்றும் சிலருக்கும் கௌரவம்
Share

மார்க்கம் நகரில் பல ஆண்டுகளாக வெற்றிகரமாக இயங்கிய வண்ணம் தமிழ் பேசும் முதியோர்களுக்கான சேவைகளை வழங்கி வரும் Boxgrove Seniors Community Wellness Club அமைப்பு நடத்திய புத்தாண்டு விழா 16-04-2025 அன்று புதன்கிழமையன்று மார்க்கம் நகரில் உள்ள சனசமூக நிலைய மண்டபத்தில் நடைபெற்றது.
நூற்றுக்கணக்கான அங்கத்தவர்கள் அங்கு ஆர்வத்துடன் வருகை தந்து அங்கு இடம்பெற்ற பாடல் மற்றும் வயலின் இசை மற்றும் பொன்னையா விவேகானந்தன் அவர்களது உரை ஆகியவற்றை கேட்டு மகிழ்ந்து கலைஞர்களைப் பாராட்டினார்கள்.
மேற்படி விழாவிற்கு அமைப்பின் தலைவர் திருமதி சுந்தரேஸ்வரி தலைமை தாங்கினார்.
இந்த விழாவில் சமூகப் பணியாற்றும் சிலருக்கு அவர்களை அங்கு அழைத்து உரிய கௌரவம் வழங்கப்பெற்றது.
விரிவுரையாளர் பொன்னையா விவேகானந்தன். உதயன் பத்திரிகை பிரதம ஆசிரியர் லோகேந்திரலிங்கம். கிறீன்பொறோ முதியோர் நலன்பேணும் அமைப்பின் தலைவி திருமதி செல்வா அருள்ராஜசிங்கம். மாகாண பாராளுமன்ற உறுப்பினர் போல் கலேன்றிரா அவர்களின் அலுவலக உத்தியோகத்தர் திருமதி கௌசல்யா சசி. மார்க்கம் முதியோர் சங்கத்தின் தலைவர் சுந்தரலிங்கம் மற்றும் வயலின் மற்றும் நடனக் கலைஞர் இளையவர் கிசோறி ராஜ்குமார் அரசியல் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர் Deepak Talreja உட்பட சிலர் மேற்படி கௌரவங்களைப் பெற்றார்கள்.
பொன்னையா விவேகானந்தன் அவர்களது புத்தாண்டு பற்றிய உரை தமிழ் மொழியின் சிறப்பையும் அதன் தொன்மையையும் பற்றியதாக அமைந்து பலரையும் கவர்ந்தது என்றால் அது மிகையாகாது.
சத்தியன்