LOADING

Type to search

இலங்கை அரசியல்

தந்தையை இழந்து தாயின் அரவணைப்பில் கல்வி கற்று சாதித்த வட்டுக்கோட்டை இந்து மாணவி!

Share

பு.கஜிந்தன்

வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியின் மாணவியான முருகையா தனுஷா என்பவர் 2024ஆம் ஆண்டு க.பொ.த உயர்தர பரீட்சையில் 3ஏ சித்திகளை பெற்று சாதனை படைத்துள்ளார். குறித்த மாணவிக்கு தந்தை இல்லாத நிலையில் தாயின் அரவணைப்பிலேயே இருந்து, வறுமையை பொருட்டாக நினைக்காது கல்வி கற்று இவ்வாறு சாதனை புரிந்துள்ளார்.

இந்த மாணவி தனது ஆரம்பப் பிரிவை பிளவத்தை அமெரிக்கன் மிஷன் பாடசாலையிலும், அதன்பின்னர் 6ஆம் வகுப்பு தொடக்கம் உயர்தர பிரிவு வரையான கல்வியை வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியில் கற்றார்.

இவர் கலைப் பிரிவில் பரீட்சைக்கு தோற்றி 3ஏ சித்திகளை பெற்று சாதனை படைத்துள்ளார். இந்த பெறுபேற்றை பெறுவதற்கு உதவிய தாயாருக்கும், பாடசாலை சமூகத்துக்கும், ஆசிரியர்களுக்கும், நண்பர்களுக்கும் அவர் தனது நன்றியை தெரிவித்தார்.

பாடசாலையில் தரும் பாடங்களை வீட்டிற்கு சென்று அன்றாடம் படிப்பதன் ஊடாகவும், பரீட்சைக்காக நேரத்தை செலவு செய்து படித்ததன் ஊடாகவும் தன்னால் இவ்வாறு பெறுபேற்றினை பெற முடிந்ததாக அவர் கூறுகின்றார்.

வறுமை என கூறும் மாணவர்கள் வறுமையை ஒரு தடையாக நினைக்காமல் பாடசாலையில் வழங்கப்படும் இலவச கல்வியை பெறுவதன் மூலம் யாவரும் நல்ல பெறுபேறுகளை பெறமுடியும் என அவர் கூறுகின்றார்.

மேலும் அதே பாடசாலையில் கல்வி பயின்ற செந்தில்வேல் அபிநயா என்ற மாணவியும் வணிகத் துறையில் பரீட்சைக்கு தோற்றி 3ஏ சித்திகளை பெற்று பாடசாலை சமூகத்துக்கும், பெற்றோருக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

இந்த மாணவி தரம் 1 தொடக்கம் கி.பொ.த சாதாரணதரம் வரையிலான கல்விறை மூளாய் சைவப் பிரகாச வித்தியாலயத்தில் கற்றதுடன் உயர்தர கல்வியை வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியில் கற்றார்.

தான் இந்த நிலைக்கு வருவதற்கு பக்க பலமாக இருந்த பெற்றோருக்கும், பாடசாலை சமூகத்தினருக்கும், ஆசிரியர்களுக்கும், நண்பர்களுக்கும் அவர் நன்றியைத் தெரிவித்தார். அத்துடன் எதிர்காலத்தில் ஒரு முகாமையாளராக வந்து மக்களுக்கு சேவை புரிவதே தனது இலக்கு என தெரிவித்தார்.