LOADING

Type to search

கதிரோட்டடம்

அரசியலில் செலுத்த வேண்டிய ‘ஆர்வம்’ திசைமாறிச் சென் ‘ஆவேசமாக’ மாறிவிட்டதா?

Share

கதிரோட்டம்     01-01-2021

ஒரு இனத்திற்கோ அன்றி ஒரு தேசத்திற்கோ தலைவனாக வர விரும்புகின்றவன் தன்னை அவற்றிக்காக இழப்பதற்கு தயாராக இருக்க வேண்டும் என்பார்கள் சில நேர்மையான அரசியல் போக்கு கொண்டவர்கள். ஒரு தேசத்திற்கு தலைவனாக வரவிரும்புகின்றவன் அரசியல் என்னும் பாதை வழியாக நீண்ட தூரம் நடந்து சென்றே அந்த இலக்கை அடையவேண்டும். அது மிக அவசியமான ஒரு விடயமாக கருதப்படுகின்றது.

ஆனால் அரசியலும் அரசியல்வாதிகளும் மேற்க் கூறிய வழிகளில் நடந்து கொள்கின்றார்கள் அல்லது அதை கடைப்பிடிக்க முயலுகின்றார்களா என்பதை பொதுஜனம் கவனிப்பதாகவே இல்லை. இதனால் சேவை செய்ய வேண்டும் என்ற ஆர்வம் கொண்டு வரவேண்டிய அரசியல் தளம் தற்போது ஆவேசம் கொண்டவர்களின் கூடாரமாகிவிட்டது.

கடந்த சில நாட்களாக அல்லது வாரங்களாக இலங்கையிலும் இந்தியாவிலும் இடம்பெற்றுவரும் அரசியல் சார்ந்து சம்பவங்கள் மற்றும் உரையாடல்கள் ஆகியன அரசியலில் இருக்க வேண்டியப ல அம்சங்களை உதறி வீசி விட்டுச் செல்வது போன்ற காட்சிகளை எமது கண்களுக்கு முன்னே கொண்டு வருகின்றன. இலங்கையில் தமிழர் பகுதிகளிலும் இந்தியாவில் தமிழ்நாட்டிலும் அரசியல் பதவிகள் தொடர்பாக இடம்பெறுகின்ற கருத்துப் பரிமாறல்களும் கண்டனங்களும் சொந்த நலம் சார்ந்தவையாகவே அதிகளவில் காணப்படுகின்றன.

இலங்கையின் வடக்குப் பிராந்தியத்தின் கேந்திரமாக விளங்கும் யாழ்ப்பாண மாநகர சபையானது அந்த மண்ணில் ஒருங்கே இணைந்து நிற்கும்; கம்பீரத்திற்கும் கனதியான அறிவாற்றலுக்கும் ஒரு கலங்கரை விளக்காக விளங்கியது. புல கற்றவர்கள் யாழ்ப்பாண மாநகரை காத்து வளர்த்து அழகுள்ள ஒரு நகரமாக்கி மக்களை அங்கு நிம்மதியோடு வாழ வைத்தார்கள். மத்திய அரசின் பார்வைக்கு உட்பட்டு யாழ்ப்பாண மாநகரசபை இருந்தாலும் அதன் தனித்துவத்தை பாதுகாப்பதில் யாழ்;ப்பாண மண்ணின் மைந்தர்கள் கண்ணியமாக உழைத்தார்கள்.

ஆனால் தற்போது, அரசியல் பதவி என்ற அந்த அதிகாரமிக்க இடத்தை அடைவதற்காக எங்கிருந்தெல்லாம் அந்த மண்ணிற்கு நாம் மேற்சொன்ன ‘ஆவேசத்தோடு’ வந்து ஊடுறுவி நின்று, குழப்பங்களை ஏற்படுத்தி அங்கு நிம்மதி குலைந்த ஒரு நிலையைத் தோற்றுவித்துள்ளார்கள்.
சாதாரண பதவிகளுக்குக் கூட கட்சிச் சாயங்களைப் பூசி முதலில் நண்பர்களைப் பிரித்து பின்னர் மக்களைப் பிரித்து, தொடர்ந்து சமூகத்தையும் சமூதாயத்தையும் சின்னாப்பின்னமாக்க காரணமாக இருக்கும் இந்த கட்;சி அரசியலுக்கு எமது மக்கள் தடையொன்றை போட வேண்டிய தேவை வந்து விட்டது என்றே கருதுகின்றோம்.

இதைப் போலவே தமிழ்நாட்டிலும் சினிமா மூலம் மக்கள் மத்தியில் தங்களை பெயர்களை அடையாளமாகக் காட்;டிக் கொண்டவர்கள் தற்போது மக்கள் மீது தங்கள் அதிகாரங்களைக் காட்டும் முயற்சியில் பதவிகளைப் பெற்றுக் கொள்வதற்காக அரசியல் களத்தில் குதித்துள்ளார்கள்.

மக்களுக்கு சேவைகளைச் செய்யாமல் திடீரென வந்து அரசியல் பதவிகளுக்குரிய ஆசனங்களில் அமர்வதற்கு அங்கு ஆவேசத்தோடு பயணிப்பவர்களை தமிழகத்து மக்கள் கண்டுவருகின்றார்கள்.

ஆனால், இலங்கையிலும் இந்தியாவிலும், கொரோனாவின் வீரியம் அதிகமாக இருந்தாலும் சமூகத்தின் நன்மையைக் கருதி சமூக இடைவெளிகளைக் கடைப்பிடிக்க வேண்டிய அவசியத்தை மறந்தவர்களாக மக்களை சேர்த்துக் கொண்டு பொதுவெளியில் பறந்து திரிகின்றார்கள்.

நோய்த் தொற்று தொடர்பாக வைத்தியசாலைகளில் பணியாற்றும் வைத்தியப் பெருந்தகைகள் தாதிகள் மற்றும் முன்வரிசைப் போராளிகள் ஆகியோர் தங்களை அர்ப்பணித்து போராடிய வண்ணம் வைத்தியச் சேவையாற்றிய வண்ணம் இருக்கின்றபோது, இந்த அரசியல் தளங்களில் உள்ளவர்கள், பதவிகளைக் குறி வைத்து ஓடிக்கொண்டே இருக்கின்றார்கள். இந்தியாவில் விவசாயிகளின் போராட்டம் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. எத்தனையோ விவசாயிகள் பல்வேறு காரணங்களால் அல்லது பாதிப்புக்களால் உயிர் துறந்துள்ளார்கள். ஆனால் அங்கு இந்திய மத்திய ஆட்சி பீடம் அவர்களை சாந்தப்படுத்தும் அளவிற்கு கீழிறங்கி வருவதாக இல்லை. நாட்கள் கடந்து செல்லும் போது நாடு எவ்வாறான நெருக்கடிக்குள் வீழ்ந்து விடுமோ என்ற எண்ணம் எதுவுமி;ன்றி, தமிழ்நாட்டையும் தனது கைகளுக்குள் கொண்டு வர டெல்லி துடித்துக்கொண்டிருக்கின்றது.

இவ்வாறாக அரசியலில் ஆர்வத்துடன் வந்து மக்கள் நலன் கவனிக்க வேண்டியவர்கள் இப்போது கட்சிகள் என்ற பிரித்து நிற்கும் அரசியல் என்னும் மேடையில் ஏறுவதற்காக மக்கள் நலனையே கருதாமல், ஆவேசத்தோடு மோதுகின்றார்கள்.

இந்த விரும்பத்தகாத நிலையானது, இலங்கையிலும் இந்தியாவிலும் தொடர்வதை கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பு நேர்மையான அரசியல்வாதிகளிடத்தில் உள்ளது என்பதை மக்கள் தெரிந்து கொண்டு, இந்தப் பதவிகளுக்கு பொருத்தமற்றவர்களை புறந்தள்ளிவிட்டு, அதற்குரியவர்களை தேடிச் சென்று அரசியல் பதவிகள் அவர்களிடத்தில் கையளிக்கப்படுவதற்காக, அயராது உழைக்க வேண்டும் என்ற வேண்டுகோளை முன்வைக்கின்றோம்.

ad