LOADING

Type to search

கதிரோட்டடம்

கனடா-பிரம்ரன் நகரபிதா பற்றிக் பிரவுணிடம் (Patrick Brown) கற்றுக் கொள்ளுங்கள், அநியாயத்திற்கு எதிராக எவ்வாறு குரல் கொடுக்க முடியும் என்பதை..

Share

கதிரோட்டம்    26-02-2021

எமது தாயகத்தில் இடம்பெற்ற தமிழின படுகொலைகள்; போர்க்குற்றங்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்கள், வெள்ளைவேன் கடத்தல் போன்ற தமிழ் மக்களுக்கு விரோதமான நடவடிக்கைகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் ஆகியவை தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபையில் கடந்த 2009ம் ஆண்டு தொடக்கம் எமது மக்கள் பிரதிநிதிகளும், அமைப்புக்களும் கடுமையாகப் போராடி வருகின்றன. ஆனால் எந்த வகையான தண்டனைகளோடு அன்றி கேள்விகளோ இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக முன்வைக்கப்படவில்லை.

இந்த விடயத்திற்காக எத்தனையோ ஆண்டுகள் வீதிகளிலும் காடுகளிலும் நின்று போராடிக்கொண்டிருக்கும் பாதிக்கப்பட்ட எமது மக்கள், தொடர்ந்தும் தாங்களாகவே போராட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள்.

இது ஒருபுறம் இருக்க, தற்போது நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் கவுன்சிலின் கூட்டத்தொடரின் மூலம் இலங்கைக்கு எதிராக எந்த ஒரு நடவடிக்கையுமே எடுக்கப்படவில்லை என்பது வெளிச்சமாகவே தெரிந்து விட்டது.

இலங்கைக்கு ஆதரவாக நிற்கும் நாடுகள் தங்கள் நாடுகளிலும் மனித உரிமை மீறல் செயல்களைச் செய்த வண்ணமே உள்ளன. பாகிஸ்த்தானில் கிறிஸ்த்தவர்களை படுகொலை செய்தும், அவர்களது தேவாலயங்களை இடித்தும் எரித்தும் மனித உரிமை மீறல்களில் ஈடுபடுகின்றவர்களை தண்டிக்காமல், அந்த நாட்டின் பிரதமர் இலங்கைக்கு ஆதரவாக செயற்பட்டுள்ளார். தனது நாட்டில் பௌத்த விகாரைகளை பாதுகாக்க தான் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தனது இலங்கைப் பயணத்தின்போது தெரிவித்துள்ளார்.

ஆனால் தமிழ் மக்களைப் படுகொலை செய்த இலங்கை அரசிற்கு தனது நாடு பக்கத்துணையாக நின்றதை வெளிப்படையாகவே கூறி தனக்கு சிங்களவர்கள் பக்கம் இருந்து புகழாரத்தைத் தேடிக்கொண்டார்.

இவ்வாறாக எமது ஈழத்தமிழர்களுக்கு விடுதலையையும் விடிவையும் பெற்றுத் தருவதற்கு மாறாக பல ‘கோடரிக் காம்புகளும்’ எமது சமூகத்தில் உள்ளதை நாம் நேரடியாகவே காண்கின்றோம். அவர்களில் பலரும், பல அமைப்புக்களும் இலங்கை அரசின் விருந்தாளிகளாகச் சென்று அங்கு விருந்துண்டு வந்ததையும் புலம் பெயர் தமிழ் மக்கள் நன்கு அறிந்து வைத்துள்ளார்கள்.

இவ்வாறிருக்க, கனடாவில் பிரம்டன் மாநகரில் மேயராக உள்ள மரியாதைக்குரிய பெற்றிக் பிரவுண் அவர்கள் (Patrick Brown) தற்போது அவரது நகரத்திற்குள் ஒரு பூங்காவில் ‘முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை அமைக்க அதிகார பூர்வமாக நடவடிக்கை எடுத்து வருகையில் கனடாவில் இயங்கும் சிங்கள அமைப்புக்கள் அதை எதிர்க்கின்றன.

ஆனால் அந்த அமைப்புக்களுக்கு எதிராகவும் அவர்களது வாதங்களுக்கும் எதிராகவும் பாதிக்கப்பட்ட எமது தமிழ் மக்களுக்கு எதிராகவும் எவ்வாறு குரல் கொடுக்கின்றார் என்பதை சில நாட்களுக்கு முன்னர் வெளிவந்துள்ள ஒரு காணொளி நன்கு காட்டுகின்றது. ஒரு சிங்கள பேச்சாளருக்கு அமைதியாகவும் |  நேர்மையாகவும் எவ்வாறு பெற்றிக் பிரவுண் என்னும் அரசியல்வாதி பதிலளிக்கின்றார் என்பதை நாம் அவசியம் அவதானிக்க வேண்டும். தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளை மதிக்கின்ற அவரை சிங்களவர்கள் விமர்சனம் செய்ய முனைந்தாலும் அதை நேர்மையாக மறுதலிக்கும் அவரது உயர்ந்த பண்பை நாம் வணங்க வேண்டும். அந்த உயர்ந்த மனிதரை நாம் போற்ற வேண்டும்.