ஒன்றாரியோ மாகாணத்தில் கோவிட்-10 தடுப்பூசிகளுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடுகள் காரணமாக மாகாண அரசின் உறுப்பினர்கள் கனடிய
Share
மாகாண அரசின் உறுப்பினர் விஜேய் தணிகாசலம் அறிவிப்பு
கோவிட்-19 தடுப்பூசி மருந்துகள் பற்றாக்குறை காரணமாக ஸ்காபாரோ சென்டனரி மருத்துவமனையிலும் சென்டனியல் கல்லூரியிலும் நடத்தப்பட்டு வந்த தடுப்பூசி வழங்கும் சேவை நேற்று 14ம் திகதி முதல் நிறுத்தப்படவுள்ளதானது மிகவும் வருத்தமளிக்கும் விடயமாகும்.
இவ்வாறு தெரிவித்துள்ளார் ஸ்காபுறோ ரூஜ் பார்க் மாகாண அரசின் தொகுதி உறுப்பினர் திரு விஜேய் தணிகாசலம். அவரது அலுவலகத்திலிருந்து எமக்குக் கிடைக்கபெற்ற செய்திக் குறிப்பில் பின்வருமாறு தெரிவிக்கப்பெற்றுள்ளது.
“மேலும் விளக்கமாகக் கூறின், ஒன்ராறியோ மாநிலம் பெற்றுக்கொண்ட ஒவ்வொரு தடுப்பூசி சொட்டு மருந்தும் முன்பதிவு செய்து காத்திருக்கும் ஒன்ராறியோ மக்களுக்காக ஒதுக்கப்பட்டதாகும். ஒன்ராறியோ மாநில முன்பதிவுப் பொறிமுறை மூலம் மட்டுமே சுமார் 2.5 மில்லியன் முன்பதிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஒன்ராறியோ மாநில முன்பதிவுப் பொறிமுறையைப் பயன்படுத்தாது, மருந்தகங்களிலும் மருத்துவமனை சிகிச்சை மையங்களிலும் பொது சுகாதார பிரிவுகள் மூலமும் செய்யப்பட்ட முன்பதிவுகள் இதில் உள்ளடக்கப்படவில்லை. 48 மணி நேரத்திற்கு முன்னர் சுமார் 400,000 ஃபைசர் சொட்டு மருந்துகளை பெற்றுள்ளோம் என்பதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.
நாட்டின் தடுப்பூசி வழங்கல் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதி செய்ய மத்திய அரசு பாடுபட்டு வருவதை நாம் அறிவோம். அதேவேளையில் ஒன்ராறியோவின் தடுப்பூசி வழங்கலில் மிகப் பெரிய சவாலாக உள்ள விடயம் தடுப்பூசிகளின் சீரானதும் நம்பகமானதுமான விநியோக முறை ஆகும். எடுத்துக்காட்டாக, ஒன்ராறியோ மார்ச் 22ஆம் திகதியை ஒட்டிய வாரத்தில் மொடேர்னா தடுப்பூசி மருந்துகளைப் பெற்றுக்கொண்டபோது, அது முதலில் எதிர்பார்க்கப்பட்ட தொகையின் வெறும் 30 வீதம் மட்டுமே கிடைக்கப்பெற்றது. எமக்கான ஒதுக்கீட்டில் மீதமுள்ள 70 வீதம் – அதாவது 225,600 தடுப்பூசி சொட்டு மருந்துகள் – காலதாமதமாக உயிர்த்த ஞாயிறு வாரத்தையொட்டியே ஒன்ராறியோவுக்கு வந்தடைந்தன. இதுவரையும், அதாவது புதன்கிழமை அறிக்கையின்படி, ஏப்ரல் 5ஆம் திகதி எமக்குக் கிடைத்திருக்க வேண்டிய 303,000 மொடேர்னா தடுப்பூசி மருந்துகள் இன்னும் எங்களுக்கு வந்துதடையவில்லை. 19ஆம் திகதி எமக்கு வரவிருந்த ஏறத்தாழ 500,000 மொடேர்னா தடுப்பூசி சொட்டு மருந்துகளின் வருகை எதிர்வரும் 29ஆம் திகதிவரை தாமதமாகியுள்ளது.
ஸ்காபரோ வாழ் மக்கள் அனைவரினதும் கவனத்துக்கு: தடுப்பூசியை போட்டுக்கொள்வதற்கு உங்களால் முன்பதிவு செய்யப்பட்ட குறித்த நாள் பிற்போடப்பட்டுள்ளதானது உங்களை வெறுப்படைச் செய்திருக்கும் என்பதை நாம் அறிவோம். ஆகவே, மத்திய அரசிடமிருந்து மருந்துகளைப் பெற்றவுடன் கோவிட்-19 தடுப்பூசி வழங்கலை சரியாக நடைமுறைப்படுத்துவதற்கும், தடுப்பூசி போடும் மையங்களை விரிவுபடுத்தவும் நாம் தயாராக உள்ளோம் என்பதை உங்களுக்கு அறியத் தருகிறோம்.
இதேவேளையில், ஸ்காபாரோ வாழ் மக்களை, நகர சபையால் நடத்தப்படும் இரண்டு சிகிச்கை மையங்களுக்கும் ஒன்ராறியோ மாநில முன்பதிவுப் பொறிமுறையூடாக பதிவுகளை மேற்கொள்வதற்கு ஊக்குவிக்கிறோம்.
மேலதிக விபரங்களுக்கு:
தொலைபேசி எண்: 1-888-999-6488
விஜய் தணிகாசலம், மாநில சட்டமன்ற உறுப்பினர்.
ஸ்காபரோ – றூஜ் பார்க்.