இந்திய வீரர் விராட் கோலி நல்ல பந்து வீச்சுகளுக்கு மரியாதை அளிப்பவர் என்கிறார் ஆப்கானிஸ்த்தான் சுழற்பந்து வீச்சாளர் ரசீட் கான்
Share
இந்தியாவின் விராட் கோலி நல்ல பந்து வீச்சுகளுக்கு மரியாதை அளிக்கும் திறன் கொண்டவர். அவரது கிரிக்கெட்ட ஆட்டத்தின் வெற்றிக்கு காரணம், அவர் ஒருபோதும் பந்து வீச்சின் தரத்தைப் தீர்மானிக்காமல் தனது ஆட்டத்தின்செயல்முறையிலிருந்து விலகுவதில்லை.
லெக்-ஸ்பின்னர் ஆற்றல் கொண்ட கோஹ்லியின் வலுவான வழக்கம் என்னவென்றால், அவர் தான் ஆடும் போது தனது ஆற்றல்களில் நம்பிக்கை வைத்திருக்கிறார், மேலும் அவர் நம்பிக்கையற்ற வகையில் தன்னை |நோக்கி வரும் பந்து வீச்சுகளுக்கு பதிலளிக்க மாட்டாடர் என்றார் ஆப்கானிஸ்த்தான் சுழற்பந்து வீச்சாளர் ரசீட் கான். யுரியுப் இணையத்தளத்திற்கு அளித்த ஒரு விசேட பேட்டியிலேயே ரசீட் கான் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேற்படி பேட்டியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது
“ விராட் கோலியிடம் நான் பல சிறப்புக்களையும் அதே வேளை எதிர்மறையான குணாம்சங்களையும் கண்டுள்ளேன். வேறு எந்த பேட்ஸ்மேன இருந்தால், நீங்கள் அவருக்கு சிறந்த முறையில் பந்து வீசினால் அவர் மன அழுத்தத்திற்கு ஆளாகி விடுவார் ஆனால் விராட் கோலி அப்படியல்ல. சிறந்த பந்து வீச்சுக்களை ரசிக்கும் தன்மை கொண்டவர். அதனால் தான் அவ்வாறான பந்து வீச்சுகளையும் அவரால் தோற்கடிக்க முடிகின்றது.
மேலும், எப்போதும் விராட் அவர்கள் தனது சொந்த செயல்முறையைத்தான் பின்பற்றுவார். வேறு எவருமைய ஆட்டத்தை பின்பற்ற மாட்டார். அவர் மைதானங்களில் தான் தனது கிரிக்கெட் ஆட்டத்தையும் எவ்வாறு பந்து வீச்சுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்பதை தனது சொந்த அனுபவங்களின் மூலம் தான் கற்றுக்கொண்டார். இதை விட அவர் வேறு எதுவும் செய்யவில்லை. அதனால்தான் அவர் மிகவும் வெற்றிகரமானவராக பிரகாசிக்கின்றார் என்று நான் நினைக்கிறேன். அவருக்கு ஒரு செயல்முறை உள்ளது .
“அவர் நல்ல பந்துகளை மதிப்பார். சற்று தளர்வான பந்து வீச்சுக்களுக்கு பலிலடி கொடுத்து பந்து வீச்சாளர்களைத் தண்டிப்பார். விராட் கோலிக்கு மிகுந்த தன்னம்பிக்கை உள்ளது. சில ஆட்டக்; காரர்களுக்கு (பேட்ஸ்மேன்களுக்கு) தன்னம்பிக்கை இல்லை. அதனால்தான் அவர்கள் போராடுகிறார்கள். பல தடவைகளில் தோல்வியை தழுவ வேண்டியுள்ளது. அவர்களால் பிரகாசிக்க முடியாமல் உள்ளது.விராட்; கோலி வித்தியாசமானவர். அவர் தனது சொந்த பலத்தை நம்புகிறார்” என்று ரிசாட் மேலும் கூறினார்.
அவர் மேலும் கூறுகையில் இந்திய வீரர் தோனி பற்றியும் குறிப்பிட்டார்ஃ”ஏம்.எஸ். தோனியோடு நான் மைதானத்தில் ந விளையாடும் ஒரு கனவு எனக்கு இருக்கிறது. ஏனென்றால் அவருடன் விளையாடும் அனுபவம் அவருக்கு மிகவும் முக்கியமானது. ஒரு பந்து வீச்சாளரைப் பொறுத்தவரை விக்கெட் கீப்பரின் பங்கு மிகவும் முக்கியமானது, மேலும் அவரை விட சிறந்தவர் வேறு யாருமில்லை என்று நான் நினைக்கின்றேன்” என்றார் ரசீட் கான்.