கனடா உதயன் பத்திரிகை மலேசியத் தமிழ்ப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தும் நாவன்மை நிகழ்ச்சி-2021
Share

உலகில் தமிழ் மொழியையும் தமிழ்ப் பண்பாட்டையும் காத்துநிற்கும் நாடுகளில் மலேசியாவும் ஒன்று என்பதை உலகத் தமிழர்கள் அனைவருமே ஏற்றுக்கொள்வார்கள். மலேசியாவில் புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர்களும் கவிஞர்களும் உள்ளார். அவர்களது படைப்புக்கள் உலகெங்கும் உள்ள வாசகர் சென்றடைந்து வாசிக்கப்பெறுகின்றன.
மலேசியாவில் சிறந்த தமிழ்ப் பேராசிரியர்களும் தமிழாசிரியர்களும் தங்கள் பணிகளை செவ்வனே ஆற்றி வருகின்றார்கள். அவர்கள் உருவாக்கும் மாணவர்களும் தமிழ் மொழியை ஆவலுடன் கற்று தமிழறிவையும் பெற்றுள்ளார்கள். அங்கு மலே மொழியூடாக சில பாடங்கள் கற்க நேர்ந்தாலும் அங்குள்ள மாணவர்கள் தமிழ் மொழியையும் ஆங்கில மொழியையும் கற்றுத் தேர்ந்து சிறந்த மாணவர்களாக விளங்குகின்றார்கள்.
அவ்வாறான ஆற்றலுள்ள மாணவர்களின் நாவன்மைத் திறனை உலகெங்கும் வாழும் தமிழன்பர்களுக்கு அறிமுகம் செய்வதே இந்த நிகழ்ச்சியின். நோக்கம். அதற்கு ஆதரவு அளிப்பதில் கனடா உதயன் நிறுவனம் தனது வெள்ளி விழா ஆண்டில் பெருமிதம் அடைகின்றது.
uthayannews@yahoo.com