இந்தியா – இலங்கை அட்டவணையில் மாற்றம்
Share

இந்தியா – இலங்கை அணிகளிடையே நடக்க உள்ள ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கான அட்டவணையில் திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
முதல் ஒருநாள் போட்டி நாளை மறுநாள் நடைபெற இருந்த நிலையில், இலங்கை அணியினர் 2 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து, இலங்கை மற்றும் இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் அவசர ஆலோசனை நடத்தி புதிய அட்டவணையை வெளியிட்டுள்ளனர்.
அதன்படி ஒருநாள் போட்டிகள் ஜூலை 18, 20, 23 தேதிகளிலும், டி20 போட்டிகள் ஜூலை 25, 27, 29 தேதிகளிலும் நடைபெற உள்ளன.