LOADING

Type to search

விளையாட்டு

வெகு நேரம் சிந்தித்து எடுத்த முடிவு தான் எனது கப்டன் பதவி துறப்பு

Share

இந்திய கிரிக்கட் அணித்தலைவர் விராட் கோலி அறிவிப்பு

வெகு நேரம் எடுத்தது. மிகவும் சிந்தித்து மற்றும் பல நண்பர்களோடு உரையாடிய பின்னர் எடுத்த முடிவே எனது பதவி துறப்பு முடிவு என்று அறிவித்துள்ளார் இந்திய அணித்தலைவர் விராட் கோலி
டி20 கேப்டன் பதிவியலிருந்து விலகுவதாக வியாழக்கிழமை இந்திய அணித்தலைவர் விராட் கோலி அறிவித்துள்ளார்.

தனது அதிகாரப்பூர்வ ட்விட்டரில் பக்கத்தில் இந்திய டி20 அணி கேப்டன் பதவியிலிருந்து விலகுவது தொடர்பாககோலி வெளியிட்டுள்ளார்.

அதில், இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்துவது மட்டுமல்லாமல், இந்திய கிரிக்கெட் அணியை என்னால் முடிந்த திறனை கொண்டு வழிநடத்தும் அதிர்ஷ்டம் எனக்கு கிடைத்தது.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக எனது பயணத்தில் எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி.

வீரர்கள், பயிற்சி ஊழியர்கள், தேர்வு ஆணையம், என்னுடைய பயிற்சியாளர்கள் மற்றும் எங்கள் வெற்றிக்காக பிரார்த்தனை செய்த ஒவ்வொரு இந்தியர் என இவர்களெல்லாம் இல்லாமல் என்னால் சாதித்திருக்க முடியாது.

பணிச்சுமையைப் புரிந்துகொள்வது மிக முக்கியமானது மற்றும் கடந்த 8-9 ஆண்டுகளில் 3 வடிவங்களில் விளையாடி, கடந்த 5-6 ஆண்டுகளாக தொடர்ந்து கேப்டனாக பணிச்சுமையை கருத்தில் கொண்டு, டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணியை வழிநடத்த முழுமையாக தயாராக எனக்கே நான் இடம் கொடுக்க வேண்டும் என நினைக்கிறேன்.

நான் டி20 கேப்டனாக இருந்த காலத்தில் அணிக்காக என்னை முழுமையாக அர்ப்பணித்தேன், தொடர்ந்து டி20 அணிக்காக நான் பேட்ஸ்மேனாக முன்னோக்கி செல்வேன்.

நிச்சயமாக, இந்த முடிவை எட்ட வெகு நேரம் எடுத்தது. மிகவும் சிந்தித்து மற்றும் எனது நெருங்கிய வட்டாரங்களான ரவி சாஸ்திரி மற்றும் ரோஹித் ஆகியோருடன் கலந்துரையாடிய பிறகு, அக்டோபர் மாதம் துபாயில் நடக்கும் டி 20 உலகக் கோப்பைக்குப் பிறகு நான் டி20 கேப்டன் பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளேன்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்