LOADING

Type to search

பொது

கோபம் ஏற்படும் வேளையில் நாம் ஏன் உரத்துப் பேசுகிறோம்?

Share

ஒரு ஆசிரியர் மாணவர்களோடு சுற்றுலா வந்த இடத்தில், அங்கே ஒரு குடும்பத்தை சேர்ந்த உறுப்பினர்கள், சத்தம் போட்டு ஒருவரை ஒருவர் திட்டிட்டிக் கொள்கின்றனர் .

அதைப் பார்த்த ஆசிரியர், தன்னோட மாணவர்களிடம் திரும்பி சிரிச்சிட்டே கேட்கிறார்? ஏன் மனிதர்கள் கோபத்தில் இருக்கும் போது மட்டும், பக்கத்தில் இருப்பவரிடம் கூட இப்படி சத்தம் போட்டு திட்டுகிறார்கள் ?

மாணவர்கள் சில நிமிடங்கள் சிந்திக்கிறார்கள்….

பின்னர்,,, மாணவர்களில் ஒருவர், கோபத்தில் நாம் அமைதியை இழக்கிறோம்! அதனால் சத்தமிடுகிறோம் என்றார் .

ஆசிரியர், ஆனால், உனக்கு மிக சமீபத்தில் இருக்கும் நபரிடம் ஏன் சத்தமிடுகிறாய்? அவர்கள் உன்னருகில் தானே நிற்கிறார்கள்? நீ சொல்ல வேண்டியதை அவர்களுக்கு மட்டும் கேட்கும் விதமாக சொல்லலாமே ?

ஒவ்வொரு மாணவனும் ஒரு காரணம் சொல்கிறார்கள். ஆனால் எந்த காரணத்திலும் அடுத்தவர்களுக்கு உடன்பாடில்லை!!

கடைசியா ஆசிரியர் பதில் சொன்னார் …. எப்பொழுதும் இரு மனிதர்கள், ஒருவர் மீது ஒருவர் கோபம் கொள்கிறார்களோ, அப்பொழுது அவர்களின் மனது இரண்டும் வெகு தொலைவுக்குச் சென்று விடுகிறது? எனவே தூரத்தில் இருக்கும் மனதுக்கு கேட்க வேண்டும் என்பதற்காகவே சத்தமிடுகிறார்கள்! மனது எவ்வளவு தூரம் விலகி இருக்கிறதோ, அவ்வளவு தூரம் இவர்கள் தங்கள் ஆற்றலை உபயோகித்து சத்தம் போட வேண்டியிருக்கு!

ஆனால், இதுவே இரு மனிதர்கள் ஒருவர் மீது ஒருவர் அன்பாக இருக்கும் போது என்ன நடக்கிறது? அவர்கள் ஒருவரைப் பார்த்து ஒருவர் சத்தமிடுவதில்லை! அமைதியாகவும், அன்பான முறையிலும் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்துவார்கள்? காரணம் அவர்களின் மனது இரண்டும் வெகு சமீபத்திலே இருக்கிறது! மனதிற்கு இடையேயான தூரம் மிகக் குறைவாக இருக்கும் அல்லது மனதிரண்டும் ஒன்றோடு ஒன்று இணைந்தே இருக்கும்!

இதைவிடவும் அதிகமாக ஒருவர் மீது ஒருவர் அன்பு செலுத்தும்போது என்ன நடக்கும்? அவர்கள் ஒருவருக்கொருவர் சத்தமாக பேச தேவையிருக்காது! அவர்களின் மனதுகள் இரண்டும் கிசுகிசுப்பாக பேசுவதில் இருந்தே, அவர்களின் கருத்துக்கள் பரிமாறப்படும்!

இன்னும் இன்னும் அன்பு அதிகமாகும்போது வார்த்தையே தேவைப்படாது! அவர்கள் கண்கள் ஒருவரை ஒருவர் பார்க்கும்போதே மனதின் எண்ணங்கள் வெளிப்பட்டுவிடும்!

எனவே நீங்கள் ஒருவருடன் ஒருவர் வாதிடும்போது, உங்கள் மனதுகள் இரண்டும் தொலைவாகப் போய்விடாமல் பார்த்துக்கொள்ளுங்கள். மனதின் தொலைவை அதிகப்படுத்தும் வார்த்தைகளை உபயோகப்படுத்தாதீர்கள்.

அப்படி செய்யாமல் போனால், ஒருநாள் உங்கள் மனங்களிரண்டின் தூரம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாகி, கடைசியில் ஒன்றுசேரும் பாதையே அடைக்கப்பட்டுவிடும் நிலை வந்துவிடும்.

காசி விசுவநாதன்