LOADING

Type to search

பொது

உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்; கடலை மற்றும் பருப்பு வகைகள்

Share

உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள் மற்றும் ஊட்டச்சத்துள்ள உணவுகளைப் பட்டியலிடும் போது, நிச்சயம் அந்த பட்டியலில் கடலை மற்றும் பருப்பு வகைகள் இடம் பெற்றிருக்கும். கடலை மற்றும் பருப்பு வகைகள உட்கொள்ளல் ஒரு சிறப்பான உணவு பழக்க வழக்கமாகும்

நட்ஸ்கள் ஊட்டச்சத்துக்களின் சக்தி மையம். ஒவ்வொரு நட்ஸிலும் உடலுறுப்புக்கள் சிறப்பாகவும் திறமையாகவும் செயல்படத் தேவையான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. முந்திரி, பாதாம் அல்லது கடலை மற்றும் பருப்பு வகைகள என இவற்றில் எதை தேர்ந்தெடுத்து சாப்பிட்டாலும், அவை அனைத்தும் ஒரே மாதிரியான நன்மைகளை வழங்குவதில்லை. ஒவ்வொன்றும் ஒவ்வொரு நன்மைகளை வழங்குகின்றன. ஆகவே உங்களுக்கு எம்மாதிரியான பலன் வேண்டுமோ அதற்கு ஏற்ப நட்ஸ்களைத் தேர்ந்தெடுத்து சாப்பிடுங்கள். அதில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சில நட்ஸ்கள் மற்றவற்றை விட சிறந்தவை. அவ்வாறான நட்ஸ்கள் எவையென்பதைப் பார்ப்போம் வாருங்கள்

முந்திரி: நம்மில் பெரும்பாலானோர் வீட்டில் திருடி சாப்பிடும் ஓர் நட்ஸ் என்றால் அது முந்திரியாகவே இருக்கும். இத்தகைய முந்திரி மிகவும் சுவையானது மட்டுமின்றி, ஆரோக்கியமானதும் கூட. இதில் இரும்புச்சத்து அதிகமாக இருப்பதால், இது உடலில் இரத்த சிவப்பணுக்களை அதிகம் உருவாக்குவதோடு, நோயெதிர்ப்பு மண்டலத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. உடல் எடையைக் குறைக்க நினைப்போருக்கு முந்திரி ஒரு சிறப்பான ஸ்நாக்ஸ். இந்த நட்ஸில் மக்னீசியம், ஜிங்க் மற்றும் ஆன்டி-ஆக்சிடன்ட் போன்ற உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதில் முக்கிய பங்காற்றும் சில அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன.

பிஸ்தா: பிஸ்தாவிலும் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. இதற்கு காரணம் இதில் உள்ள அர்ஜினைன் மற்றும் வைட்டமின் பி6 தான். இந்த ஊட்டச்சத்துக்கள் இரத்தத்தின் வழியாக ஆக்சிஜனை செல்களுக்கு சுமந்து செல்ல வைக்கின்றன. மேலும் இது நோயெதிர்ப்பு சக்தி மற்றும் நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.

உலர் திராட்சை: உலர் திராட்சை ஒரு உலர் பழம் என்றாலும், இதில் ஊட்டச்சத்துக்கள் ஏராளமாக உள்ளது. நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் நட்ஸ்களின் பட்டியலை தயாரிக்கும் போது, அதில் உலர் திராட்சையை தவிர்க்க முடியாது. ஏனெனில் இது விலைக் குறைவில் எளிதில் கிடைக்கக்கூடியது. இதில் உள்ள அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள், காய்ச்சல், தொற்றுகள் மற்றும் பிற பருவக்கால நோய்களில் இருந்து பாதுகாக்கிறது. மேலும், இதில் இரும்புச்சத்து அதிகம் உள்ளதால், மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

பாதாம்: பாதாம் நட்ஸ்களிலேயே மிகவும் ஆரோக்கியமானது. இதில் புரோட்டீன் முதல் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதால், குழந்தைகளுக்கு தினமும் பாதாம் கொடுக்க அறிவுறுத்தப்படுகிறது. நல்ல சுவையான இந்த பாதாமில் வைட்டமின் ஈ அதிகமாக உள்ளது. இந்த சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்சிடன்ட் ப்ரீ-ராடிக்கல்களால் செல்கள் சேதமடைவதில் இருந்து பாதுகாக்கிறது. அதோடு இதில் நோயெதிர்ப்பு மண்டலத்தின் ஆரோக்கியத்திற்கு தேவையான இரும்புச்சத்து உள்ளது. அதுவும் 5-6 பாதாமை நீரில் ஊற வைத்து அதிக காலையில் சாப்பிட்டால், அது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், உடலில் உள்ள வீக்கத்தைக் குறைக்கும் மற்றும் நாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைக்கும்.

வால்நட்ஸ்: மூளையின் வடிவத்தைப் போன்றே தோற்றமுடைய வால்நட்ஸ், மூளையின் ஆரோக்கியத்தையும், செயல்பாட்டையும் மேம்படுத்தக்கூடியது. அதே வேளை இது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது. இந்த நட்ஸ் இவ்வளவு ஆரோக்கியமானதாக இருப்பதற்கு அதில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் தான் காரணம். மேலும் இதில் உள்ள அதிகப்படியான அழற்சி எதிர்ப்பு பண்புகள், இதய நோய் மற்றும் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கிறது. அதோடு இது நோயெதிர்ப்பு சக்தி மற்றும் உடலின் மெட்டபாலிசத்தை மேம்படுத்துகிறது. இது தவிர, வால்நட்ஸ் கண்கள், மூளை மற்றும் விந்தணுக்களின் ஆரோக்கியத்தைப் பராமரிக்கவும் உதவுகிறது.

பிரேசில் நட்ஸ்: அமேசானை பிறப்பிடமாக கொண்ட பிரேசில் நட்ஸ் மிகவும் மென்மையானவை மற்றும் சுவையானவை. இந்த நட்ஸ் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை வழங்குவதற்கு காரணம், அதில் உள்ள செலினியம் என்னும் பொருள் தான். இது உடலின் சீரான செயல்பாட்டிற்கு மிகவும் இன்றியமையாததாகும். நட்ஸ்களிலேயே பிரேசில் நட்ஸில் தான் செலினியம் அதிகமாக உள்ளது. இதன் ஒவ்வொரு நட்ஸிலும் 96 அஉப செலினியம் உள்ளது. தினமும் ஒரு கையளவு பிரேசில் நட்ஸ் சாப்பிட்டால், தைராய்டு செயல்பாடு மேம்படும், உடல் வீக்கம் குறையும் மற்றும் இதயம், மூளை போன்றவை நோய்கள் தாக்காமல் பாதுகாப்பாக இருக்கும்.

“ஆரோக்கியம் பற்றி சிந்தித்து செயற்படுதல் அவசியமானதாகும்”

இரா.சஹானா