LOADING

Type to search

அரசியல்

மன்னார் மாவட்டத்தில் மரக்கறிகளின் விலை சடுதியாக அதிகரித்ததால் பொது மக்கள் பாதிப்பு

Share

மன்னார் நிருபர்

(17-11-2021)

நாடளாவிய ரீதியில் மரக்கறி வகைகளின் விலை சடுதியாக அதிகரித்துள்ள நிலையில் மரக்கறிகளை கொள்வனவு செய்யும் மக்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதுடன் மரக்கறி விற்பனையாளர்களும் வியாபாரம் இன்றி பாதிக்கப்பட்டுள்ளனர்.

நாட்டில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தால் ஏற்கனவே மக்கள் பொருளாதார சுமையில் சிக்கித்தவித்து வருகின்ற நிலையில் சீரற்ற காலநிலை காரணமாக மரக்கறிகளின் விலைகளும் சடுதியாக உயர்ந்துள்ளது.

மன்னார் மாவட்டத்திலும் மரக்கறி வகைகளின் விலையும் அதிகரித்தள்ளது. அந்த வகையில் இன்று புதன்கிழமை(17) ஒரு கிலோ கரட் 380 ரூபாய் வரையும், லீக்ஸ் 340 ரூபாய் வரையும், கத்தரிக்காய் 350 ரூபாய் வரையும், கறிமிளகாய் 480 ரூபாய் வரையும், பெரிய வெங்காயம் 240 ரூபாய் வரையும், தக்களி 500 ரூபாய் வரையும், போஞ்சி 450 ரூபாவுக்கும் பிரதான வியாபார நிலையங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

மரக்கறிகளின் விலை சடுதியாக அதிகரித்த நிலையில் மரக்கறிகளை கொள்வனவு செய்யும் மக்களின் எண்ணிக்கையும் குறைவடைந்துள்ளது.

மரக்கறிகளின் விலையேற்றம் காரணமாக மன்னார் மாவட்டத்தில் உள்ள விற்பனையாளர்களும் பொது மக்களும் தொடர்சியாக பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.