LOADING

Type to search

பொது

குளிர் கால பராமரிப்பு வழி முறைகள்

Share

குளிர் காலம் ஆரம்பித்து விட்டால் எமது உடல் மற்றும் சரும ஆரோக்கியத்தில் மேலதிக கவனம்
செலுத்த வேண்டும் .

பனிக்காலத்தில் சருமம் தொடர்பான குறிப்புகள் குளிர் காலத்தில் சருமம், முடி போன்றவை வெகுவாக பாதிக்கப்படுகின்றன. பலருக்கு உடம்பு முழுவதுமே வறண்டு காணப்படும். முறையான ஊட்டச்சத்தான உணவு, எமது சருமம் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது.

ஆரஞ்சு பழமும், தேனும். வறண்ட சருமம் உடையவர்கள் மட்டுமல்லாது எண்ணெய் வடியும் முகத்தை கொண்டவர்களுக்கும் இந்த இரண்டும் அற்புத மாற்றத்தை ஏற்படுத்திவிடும்.

வைட்டமின் ஏ மற்றும் சி சத்துக்கள் அதிகம் நிறைந்த இந்த பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், மேனி மினு மினுப்படையும்.

உதடு வெடிப்பிற்கான எண்ணெய் அல்லது வெண்ணையை உதட்டில் தடவலாம் அதனால், வெடிப்பு குணமாவதுடன், உதட்டுக்கு கூடுதல் மென்மை கிடைக்கும். இரவு உணவுக்கு பின் ஒரு டம்ளர் சுடுநீரில் சிறிதளவு தேன், 6,7 சொட்டு எலுமிச்சை சாறு கலந்து குடியுங்கள், குளிர் காலத்தில் காலையில் வரும் வறட்டு இருமல்,சளி குணமாகும்.

வாக்கிங் போகிறவர்கள் காலை தவிர்த்து மாலையில் போவது நல்லது குளிர் காலத்தில் ஜீரண சக்தி குறைவாக இருக்கும், எனவே கடின மற்றும் அசைவ உணவுகளை தவிர்த்து, எளிய சைவ உணவுகளையே எடுத்து கொள்ளுங்கள் பனிக்காலத்தில் பாதம் தொடர்பான குறிப்புகள் இக்காலங்களில் சருமம் மீது கவனம் கொள்ளும் அதே வேளையில் எமது பாதங்களை பராமரிப்பதும் அவசியமாகும்.

உங்கள் பாதங்களை பாதுகாத்து கொள்ள சில குறிப்புகள்:-

* தினமும் இரண்டு வேலை பாதங்களில் மாய்ஸரைசர் தடவி வந்தால் பாதங்கள் வறண்டு போகாமல் இருக்கும்.
* வெதுவெதுப்பான தண்ணீரில் கொஞ்சம் தேன் சேர்த்து அந்த தண்ணீரில் காலை வைத்தால் பாதங்கள் வறண்டு போகாமல், அழகாக இருக்கும்
* ஆலிவ் எண்ணெயை பாதங்களில் மசாஜ் செய்து வந்தால் வெடிப்பு, வறண்ட பாதங்களிலிருந்து தீர்வு கிடைக்கும்
* பாத வெடிப்பில் இருந்து பாதுகாக்க தினமும் பாதங்களில் மாய்ஸரைசர் தடவி ஷாக்ஸ் அணிந்த கொள்ளவும்.

பனிக்காலத்தில் மூட்டு வலிக்கான குறிப்புகள்

பனிக்காலங்களில் சருமத்தை பற்றி சிந்திப்பது போல உடல் ஆரோக்கியத்தில் ஏற்படும் சில பாதிப்புக்களையும் கவனிக்க வேண்டும். அவ்வாறானவற்றில் முக்கியமான ஒன்று தன மூட்டு வலி.

குளிர், பனிகாலம் மூட்டுவலி நோயாளிகளுக்கு ஒரு கெட்ட காலம் என்று கூறலாம். ஏனெனில் குளிர் காலத்தில் உடல் உஷ்ணம் குறைவதாலும் நரம்புகள் பிடிப்பதாலும், தசை நார்கள் இறுக்கம் அடைவதாலும் மூட்டுகள் பாதிப்படைகின்றன.

மூட்டுவலியில் இருந்து குணமடைய எளிய தீர்வுகளை:-

* தினசரி மூட்டுகளுக்கும் கால் விரல்களுக்கும் பயிற்சி கொடுத்து வர மூட்டுவலி மறையும்.

* குளிரால் மூட்டு வலி ஏற்பட்டால் அப்பகுதியில் வெந்நீர் ஒத்தடம் கொடுக்கலாம்.

* கால்சியம் சத்துள்ள உணவுகளை எடுத்துக் கொள்வதால் எலும்பு வலிமை அடையும். குளிர் காலத்தில் மூட்டுக்கான பயிற்சிகளை செய்வதன் மூலம் வலி ஏற்படுவதை தடுக்கலாம்.

* குளிர் காலங்களில் அதிகாலை குளிரில் வெளியில் வருவதை தவிர்க்கவும். வெளியில் வர நேர்ந்தால் மப்ளர், சாக்ஸ், ஷூ பயன்படுத்தி கால்கள், கழுத்து பகுதி கதகதப்பாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளலாம்.

“தகுந்த பராமரிப்புடன் செயற்பட்டால் பனிக்காலமும் இன்பமே”

– இரா. சஹானா