விதியென்று எண்ணி விலகிட முடியா இழப்பு | திருமதி. ஷீலா சுகுமார் (தகைமை பெற்ற கணக்காளர்)
Share
கனடா வர்த்தகப் பிரமுகர் கணேசன் சுகுமார் அவர்களின் ஆருயிர்த் துணைவியாரும் சஞ்சய், சோபியா ஆகியோரின் அன்புத் தாயாருமான திருமதி ஷீலா சுகுமார் அவர்களின்
31ம் நாள் நினைவு நாளையொட்டிய அஞ்சலிக் கவிதை
நால்வர் அடங்கிய நல்லதோர் குடும்பம்
நெடியதோர் தலைவனாய் சுகுமார் பெருமகன்
சாலப் பொருந்திய தலைவியாய் தகைசார் ஷீலா
சீரும் சிறப்புமாய் சிறந்த ஒளிர்ந்தது வாழ்வு
காலப் போக்கில் கற்றுத் தேர்ந்த செல்வனும் செல்வியும்
காவியம் படைத்திட ஆவலாய்க் கால்பதிக்க
காலனின் கணக்கின் நாட்கள் நெருங்கிட கவர்ந்தனன்
கணக்கியல் வித்தகி கனிவின் உறைவிடம் அன்னையவளை
அதிபதி ஆயினும் அமைதியின் இருப்பிடம் ஷீலா
ஆர்ப்பாட்டம் இல்லா திறந்த புத்தகம் ஷீலா
மதி நுட்பம் மிகக் கொண்ட மங்கையர் திலகம் ஷீலா
மற்றவர் விரும்பி மதித்த நல் நண்பியாம் ஷீலா
நிதியியல் துறையில் நிரம்பிய அறிவாம் ஷீலா
நிர்மலன் அடியை நிதமும் தொழுதவர் ஷீலா
விதியென்று எண்ணி விலகிட முடியா இழப்பு
விடை கொடுத்தோம் அன்று விழி நிரம்பிய தவிப்பு
குங்குமம் உதித்த நெற்றியும் குழந்தை மனமும்
குடும்பத்தின் விளக்குமாய் திகழ்ந்தவர் அணைந்தார்
பொங்கிய செல்வமும் போற்றுதல் பலவும் பெருமையும்
பெற்று மகிழ்ந்தவர் உடலில் கரும் புள்ளியாய்
தங்கிய தாக்கம் தந்திட்ட வேதனை தாங்கி
தாய்மையையின் உணர்விற்கும் தாரத்தின் உயர்விற்கும்
பங்கம் வராமல் பக்குவம் காத்திட்ட பத்தினியின்
பிரிவதை ஏற்று அவரைப் போற்றியே துதிப்போம்
அன்பர் கணேசன் சுகுமார் அவர்களின் நண்பர்கள்