LOADING

Type to search

பொது

14 பெண்களை மேட்ரிமோனி மூலம் ஏமாற்றி திருமணம் செய்த 60 வயது முதியவர்

Share

ஒடிசாவின் கேந்திரபாரா மாவட்டத்தில் உள்ள பட்குரா காவல் நிலையப் பகுதியில் உள்ள கிராமத்தில் வசிக்கும் 60 வயது முதியவரின் கதை உங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தும்.

ஒடிஷாவைச் சேர்ந்த ஹோமியோபதி டாக்டர் ஒருவர் 1982ம் ஆண்டு முதல் திருமணம் செய்து கொண்டார், பின்னர் 2002ம் ஆண்டு இரண்டாவது திருமணம் செய்து கொண்டார், மேலும் இந்த இரண்டு திருமணங்கள் மூலம் அவருக்கு ஐந்து குழந்தைகள் உள்ளனர்.

திருமண தகவல்களை வழங்கும் மேட்ரிமோனியை இணையதளத்தில் தான் வக்கீல், டாக்டர் என அறிமுகம் செய்து கொண்டு, ஆறு ஆண்டுகளில் 12 பேரை திருமணம் செய்துள்ளார். ஒவ்வொரு முறையும் திருமணம் செய்து அழைத்து வரும் பெண்ணிடம் இருக்கும் பணம், தங்க நகைகள் ஆகியவற்றை அபகரித்துக்கொண்டு தலைமறைவாகி விடுவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

இதுவரை 7 மாநிலங்களில் 14 பெண்களை திருமணம் செய்துள்ளார். மனைவிகளை விட்டுச் செல்வதற்கு முன்பு இந்தப் பெண்களிடம் பணம் எடுத்துள்ளார். எனினும், கைது செய்யப்பட்ட நபர் குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.

புவனேஷ்வர் துணை போலீஸ் கமிஷனர் உமாசங்கர் தாஸ் இது குறித்து கூறுகையில், குற்றம் சாட்டப்பட்டவர் 1982 ஆம் ஆண்டு முதலில் திருமணம் செய்து கொண்ட நிலையில், 2002 ஆம் ஆண்டு இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் எனவும் இந்த இரண்டு திருமணங்கள் மூலம் ஐந்து குழந்தைகள் உள்ளனர் எனவும் கூறினார்.

2002 முதல் 2020 வரை மேட்ரிமோனியல் இணையதளங்கள் மூலம் மற்ற பெண்களுடன் நட்பாக பழகி, முதல் மனைவிக்கு தெரிவிக்காமல் இந்த பெண்களை திருமணம் செய்ததாக தாஸ் கூறினார். டெல்லியில் பள்ளி ஆசிரியையாக வந்த தனது கடைசி மனைவியுடன் ஒடிசாவின் தலைநகர் புவனேஸ்வரில் வசித்து வந்த நிலையில், இதற்கு முன் நடந்த திருமணங்கள் குறித்து இந்த பெண்ணுக்கு தெரிய வந்ததால் போலீசில் புகார் அளித்ததாக கூறப்படுகிறது.

குற்றம் சாட்டப்பட்டவர் நடுத்தர வயதுள்ள பெண்கள், அதிலும் பெரும்பாலும் விவாகரத்தானார்கள் அல்லது விதவைகளை குறி வைத்து ஏமாற்றியுள்ளார். குற்றவாளியிடம் இருந்து 11 ஏடிஎம் கார்டுகள், 4 ஆதார் கார்டுகள் மற்றும் பிற ஆவணங்களை போலீசார் கைப்பற்றினர்.