பயங்கரவாத தடைச் சட்டத்தை முற்று முழுதாக நீக்க கோரி மன்னாரில் கையெழுத்து போராட்டம்
Share
மன்னார் நிருபர்
26-02-2021
நாடளாவிய ரீதியில் நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க கோரி இலங்கை முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் கையெழுத்து போராட்டம் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தலைமையில் இன்று சனிக்கிழமை (26) காலை 9 மணியளவில் மன்னார் பேருந்து நிலையத்தில் இடம்பெற்றது.
பயங்கரவாத தடை சட்டம் என்ற போர்வையில் மனித உரிமைக்கு எதிராக பயன்படுத்தப்படும் பயங்கரவாத தடைச் சட்டத்தை முற்று முழுதாக நீக்க கோரி நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் இப்போராட்டத்தின் பகுதியாக இன்றைய தினம் மன்னாரில் பொதுமக்களிடம் கையெழுத்து சேகரிக்கப்பட்டது.
குறித்த போராட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான M.A. சுமந்திரன் ,இராசமாணிக்கம் சாணக்கியன் நகரசபை ,பிரதேச சபை உறுப்பினர்கள் ,தவிசாளர்கள், பெண்கள் அமைப்பு பிரதிநிதிகள், சட்டத்தரணிகள், அருட்தந்தையர்கள், மத குருக்கள் உட்பட பலரும் கலந்து கொண்டு கையெழுத்து போராட்டத்திற்கு ஆதரவளித்தனர்
நவரசம் எனும் கவிதை நூல் வெளியிட்டமையின் காரணமாக பயங்கரவாத தடை சட்டத்தின் ஊடாக கைது செய்யப்பட்டு 19 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட அஹானாப்பும் கையெழுத்து போராட்டத்தில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது