LOADING

Type to search

அரசியல்

மன்னாரில் உள்ளூர் உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்தும் வகையில் ‘புத்தாண்டு சந்தை’

Share
(மன்னார் நிருபர்)
 
(16-03-2022)
மன்னார் ஹற்றன் நஷனல் வங்கியினால் இலத்திரனியல் கொடுப்பனவை ஊக்குவிக்கும் வகையிலும், உள்ளூர் உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்தும் வகையிலும் மன்னார் பஜார் பகுதியில் இன்று புதன்கிழமை (16) காலை ‘புத்தாண்டு சந்தை’ மற்றும் விற்பனை இடம் பெற்றது.
இதன் போது மன்னார் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அனைத்து விதமான உள்ளூர் உற்பத்தி பொருட்களும் கண்காட்சிக்கு வைக்கப்பட்டதோடு, மலிவு விற்பனையும் இடம் பெற்றது.
குறித்த புத்தாண்டு சந்தை கண்காட்சி மற்றும் விற்பனையின் போது பெண் தலைமைத்துவ குடும்ப பெண்களும் அதிக அளவில் தமது உற்பத்தி பொருட்களை காட்சிப்படு;ததியதோடு,விற்பனையும் இடம் பெற்றது.
பொருட்களை கொள்வனவு செய்கின்றவர்கள் கொடுப்பனவை இலத்திரனியல் ஊடாக வங்கிக்கு பரிமாற்றம் செய்ய நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டது.
குறித்த நிகழ்வில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்வி டி மெல் , மன்னார் ஹற்றன் நஷனல் வங்கியின் பிராந்திய முகாமையாளர் (விற்பனை) விற்பனை ரி.நிஷாந்தன் மற்றும் வங்கி பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.