LOADING

Type to search

பொது

சிறந்த காலை உணவு

Share

காலை உணவென்பது எமது நாளை சிறப்பாக மாற்றும் வலிமை உடையது. காலை உணவை சரியான முறையில் எடுத்துக்கொண்டால் அன்றைய நாள் சிறப்பாகவும் ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் அமையும்.

காலையில் 7 மணிமுதல் 9 மணிவரையான காலமே காலை உணவை உண்பதற்கு பொருத்தமானது என மருத்துவர்கள் பரிந்துரை செய்கின்றனர்.

இந்த நேரத்தை தாமதமாக்கிவிட்டு உணவு உட்கொள்ளவதால் மயக்கம், போதியளவு சத்தின்மை என உடல் ரீதியான பாதிப்புக்கள் நேரிட கூடும்.

காலை உணவில் நேரத்தை மட்டும் கவனத்தில் கொள்ளாமல் நாம் என்ன வகையான உணவை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதிலும் கவனமாக இருக்க வேண்டும் .

சிலர் உடல் இடையை குறைக்கவேண்டும் என காலை உணவை தவிர்ப்பர் இது தவறான விடயமாகும். மேலும் காலையில் கொழுப்பு மற்றும் இனிப்பு நிறைந்த உணவுகளை தவிர்ப்பது சிறந்தது. இன்று இக்கட்டுரை மூலம் எவ்வாறான உணவுகளை காலையில் உட்கொள்ளலாம் என பார்க்கலாம்.

முட்டை

சத்தான காலை உணவை உண்ணும் எண்ணம் இருந்தால் முட்டை ஒரு சிறந்த தெரிவாக அமையும் காரணம் முட்டையில் தேவையான அளவு புரதம் காணப்படுகிறது. இதனால் உடலுக்கு தேவையான சத்து கிடைப்பதோடு உணவில் ஒரு முழுமைத் தன்மையும் ஏற்படும்.

ஓட்ஸ்

பழமை வாய்ந்த சிறந்த உணவு என்றால் அது ஓட்ஸ் தான். இதில் பீட்டா குலுக்கன் எனப்படும் ஒரு தனி தன்மை வாய்ந்த நார்சத்து காணப்படுகிறது. மேலும் இதில் இரும்பு சத்து, வைட்டமின், மாங்கனீசு மற்றும் புரதம் போன்ற உடலுக்கு தேவையான சத்துக்களும் உண்டு .

நட்ஸ்

அனைத்து வகையான நட்ஸ்களும் மாங்கனீசு, பொட்டாசியம் மற்றும் இதயத்திற்கு உகந்த நல்ல கொழுப்புகளை உடையது. இது உடல் இடையை கட்டுப்படுத்தவும் உதவும்.

கிறீன் டி

காலை உணவுடன் ஒரு கோப்பை அளவு கிறீன் டி பருகுவதால் அன்றைய நாள் சுறுசுறுப்பாக அமையும்.

பழங்கள்

அதிக அளவில் சாப்பிடாமல் அளவாக காலையில் சாப்பிட வேண்டும் என எண்ணம் இருந்தால் பழங்கள் ஒரு சிறந்த தெரிவு ஆகும். காரணம் பழங்களில் நமக்கு தேவையான அளவு விட்டமின்கள் மற்றும் பொட்டாசியம் கிடைக்கும். இது உடல் இடையை குறைத்தல் , சரும பராமரிப்பு போன்ற பல விடயங்களில் எமக்கு உதவிபுரியும்.

ஆனைக்கொய்யா

இலகுவான மற்றும் ஆரோக்கியமான உணவுகளில் ஒன்றுதான் இந்த ஆனைக்கொய்யா. இதில் நல்ல கொழுப்பே அடங்கியுள்ளது. இதனால் உடல் பருமன் தொடர்பாக எந்த பிரச்னையும் ஏற்படாது. எனவே எவ்வித பயமும் இன்றி காலை உணவில் இதனை சேர்த்துக்கொள்ளலாம் .

“சரியான காலை உணவு – புத்துணர்ச்சியான நாளுக்கான வழி”

– இரா.சஹானா