LOADING

Type to search

அரசியல்

குழந்தைகள் வாசிப்பு இயக்கம் சார்பில் அம்மையப்பட்டு ஊ.ஒ.நடுநிலைப்பள்ளிக்கு கதை நூல்கள் இலவசமாக வழங்கும் விழா

Share

வந்தவாசி. ஏப்ரல்.04. வந்தவாசி ஒன்றியத்திலுள்ள அரசுப் பள்ளிகளில் படிக்கிற குழந்தைகளிடம் புத்தகம் வாசிப்பதில் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் தொடங்கப்பட்ட குழந்தைகள் வாசிப்பு இயக்கத்தின் சார்பில் அம்மையப்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவ-மாணவிகளுக்கு 250 நூல்கள் இலவசமாக வழங்கப்பட்டன.

கரோனா தொற்று பரவலால் பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில், குழந்தைகளின் கல்வி பெரிதும் பாதிக்கப்பட்டது. கடந்த பிப்ரவரி-1 முதல் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ளன. குழந்தைகளிடம் புத்தகம் வாசிக்கும் ஆர்வத்தை தூண்டவும் வகையில் வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த எழுத்தாளர் மு.முருகேஷ் எழுதிய மத்திய அரசின் ‘பால சாகித்திய புரஸ்கார் விருது’க்கு தேர்வான ‘அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை’
எனும் சிறுவர் கதை நூலை, அனைத்து அரசுப் பள்ளி மாணவ-மாணவிகளுக்கும் வழங்கும் வகையில் குழந்தைகள் வாசிப்பு இயக்கத்தின் சார்பில் இலவசமாக பல அரசுப் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று அம்மையப்பட்டு ஊ.ஒ.நடுநிலைப் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நூல்கள் வழங்கப்பட்டன.

இந்த விழாவிற்கு அம்மையப்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் க.ஜோதிபாபு தலைமையேற்றார். உதவித் தலைமையாசிரியர் ம.க.செந்தில்குமார் அனைவரையும் வரவேற்றார்.

அரிமா சங்கத்தின் முன்னாள் மாவட்ட ஆளுநர் வேல்.சோ.தளபதி, அம்மையப்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பள்ளிக் குழந்தைகள் வாசிப்பதற்காக 250 நூல்களை மாணவர்களுக்கு இலவசமாக வழங்கி, சிறப்புரையாற்றினார்.

இவ்விழாவில், ‘பால சாகித்திய புரஸ்கார் விருது’க்கு தேர்வான கவிஞர் மு.முருகேஷூம் பங்கேற்றார். மேலும், பள்ளி ஆசிரியர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

‘அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை’ நூலை இலவசமாக பெற விரும்பும் புத்தகம் படிப்பதில் ஆர்வமுள்ள வந்தவாசி ஒன்றியத்திலுள்ள அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகள் 9444360421 எனும் செல்பேசி எண்ணுக்கு அழைத்து தகவல் தெரிவித்தால், குழந்தைகள் வாசிப்பு இயக்கத்தின் மூலமாக அவர்களுக்கு நூல் இலவசமாக வழங்கப்படும்.

படக்குறிப்பு :

குழந்தைகள் வாசிப்பு இயக்கத்தின் சார்பில் அம்மையப்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவ-மாணவிகளுக்கு ‘பால சாகித்திய புரஸ்கார் விருது’க்கு தேர்வான ‘அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை’ நூலின் 250 பிரதிகளை அரிமா சங்க
முன்னாள் மாவட்ட ஆளுநர் வேல்.சோ.தளபதி வழங்கியபோது எடுத்த படம்.