LOADING

Type to search

கனடா அரசியல்

கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் புதிய தலைவராக பிரபல எழுத்தாளரும் பேச்சாளரும் கவிஞருமான அகணி சுரேஸ் அவர்கள் பதவியேற்றார்

Share

கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் புதிய தலைவராக பிரபல எழுத்தாளரும் பேச்சாளரும் கவிஞரும் ‘திருக்குறளை’ திருமந்திரமாக ஏற்று உலகளவில் பங்காற்றி வருபவருமான அகணி சுரேஸ் அவர்கள் பதவியேற்றார். -கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்திற்கான 2022-2024 காலப்பகுதிக்கான புதிய நிர்வாக சபை 09-07-2022 மதியம் ஸ்காபுறோவில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பதவியேற்றது. அனைத்துப் பதவிகளுக்கும் அனைவரும் போட்டியின்றி ஏகமனதாகத் தெரிவானார்கள்.

இணையத்தின் முன்னாள் தலைவர் எழுத்தாளர் குரு அரவிந்தன் இந்த விடயம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் ‘”2018-2022 வரை செயற்பட்ட எமது நிர்வாக சபையினருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். எல்லாவிதத்திலும் ஒன்றுபட்டு இதுவரை காலமும் சிறப்பாகச் செயற்பட்ட நிர்வாகசபை அங்கத்தவர்கள் அனைவருக்கும் எனது நன்றி உரிதாகுக. அத்துடன் புதிய தலைவருக்கும் எமது வாழ்த்துக்கள்.” என்றுதெரிவித்துள்ளார்.

பின்வருவோர் நிர்வாக சபையில் (யூலை 2022- யூன் 2024) ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்கள்

அன்புடன்
குரு அரவிந்தன்.

CTWA – Committee for July 2022 – June 2024
பொதுக்கூட்டத்தில் தெரிவு செய்யப்பட்டவர்கள். 9-7- 2022 (AGM)
President தலைவர் – S. Akani Suresh –
Vice President உப- தலைவர் – Kuru Aravinthan –
Secretary செயலாளர் – Kamalavathana Suntha –
As. Secretary உதவிச் செயலாளர் – R.N. Logendralingam-
Treasurer தனாதிகாரி – T. Gnanaganeshan –

Committee Members நிர்வாக சபை உறுப்பினர்கள்
1) S.J.Sothy –
2) K.Ravinthranathan –
3) G.Rajgumar –
4) Aruna Arulappu
5) Vasuki Nagularajah
6) kanapathy Ravinthiran